இப்படி ஒரு குற்றத்தை பண்ணிட்டு எத்தனை நாள் ஓட முடியும்.. என்கவுன்டரால் ஹேப்பியான சினிமா பிரபலங்கள்!

Recommended Video

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொலை..!

சென்னை: ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கு திரை பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் கடந்த 27ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தெலுங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக துரித விசாரணை நடத்திய போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

உடல் எரிப்பு

உடல் எரிப்பு

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்று உடலை ஹைதராபாத்- பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் கீழ் எரித்ததை ஒப்புக் கொண்டனர்.

என்கவுன்டர்

என்கவுன்டர்

இந்நிலையில் இன்று காலை 3 மணிக்கு பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்ட அதே இடத்தில் வைத்து குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் என்கவுன்டரில் போட்டுத்தள்ளினர். தெலுங்கானா போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

நீதி கிடைத்துள்ளது

நீதி கிடைத்துள்ளது

இந்த என்கவுன்டர் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கிடைத்திருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இறுதியாக நீதி

என்கவுன்டர் தொடர்பாக நடிகர் விஷால் பதிவிட்டுள்ள டிவிட்டில் இறுதியாக நீதி கிடைத்துவிட்டது.. தெலுங்கானா போலீசாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.. கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்திருக்கிறார்.

சிறு அமைதி

இதேபோல் படத் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ள டிவிட்டில் அவரது குடும்பத்திற்கு இந்த சம்பவம் சிறு அமைதியை கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.. நீதி கிடைத்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

காலையிலேயே நல்ல செய்தி

தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா பதிவிட்டுள்ள டிவிட்டில் இன்று காலை நல்ல செய்தியுடன் எழுந்திருக்கிறேன்.. நீதி கிடைத்துவிட்டது என தெரிவித்திருக்கிறார்.

நல்ல செய்தி

இதேபோல் நடிகர் ஹரீஷ் கல்யாண் பதிவிட்டுள்ள டிவிட்டில் நல்ல செய்தி என குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட செய்தியை மேற்கோள் காட்டி டிவிட்டியிருக்கிறார்.

நடிகை ஹன்சிகா

இதேபோல் நடிகை ஹன்சிகா மோத்வானி பதிவிட்டுள்ள தனது பதிவில் நீதி கிடைத்துவிட்டது என தெரிவித்திருக்கிறார்.

நன்றி போலீஸ்

நடிகை ரகுல் பிரீத்சிங் பதிவிட்டுள்ள டிவிட்டில் கற்பழிப்பு போன்ற ஒரு குற்றத்தைச் செய்தபின் நீங்கள் எவ்வளவு தூரம் ஓட முடியும்.. நன்றி தெலுங்கானா போலீஸ் என தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X