நடிகர் சூர்யா பிறந்த நாள்.. சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழியும் சினிமா பிரபலங்கள்!

சென்னை: நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார் சூர்யா.

நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம், அயன், 7ஆம் அறிவு, சிங்கம் சீரிஸ், அஞ்சான், பசங்க 2, என்ஜிகே, காப்பான் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

கைவசம் 5 படங்கள்

கைவசம் 5 படங்கள்

கடைசியாக அவரது நடிப்பில் சூரரை போற்று திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சூர்யா தற்போது ராக்கெட்ரி, சூர்யா 39, எதற்கும் துணிந்தவன், சூர்யா 41, வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் சினிமா பிரபலங்களும் நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எதற்கும் துணிந்த சூர்யா

எதற்கும் துணிந்த சூர்யா

நகைச்சுவை நடிகர் சதீஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில், எதற்கும் துணிந்த சூர்யா சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். பல வெற்றிகளுடன் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

அகரத்தின் மூலம்

அகரத்தின் மூலம்

அகரத்தின் மூலம் ஆயிரமாயிரம் எளியவர்களின் கல்வி அரியணையேற்றி அழகுபார்க்கும் அன்பு சூர்யா அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

வரவிருக்கும் தலைமுறைகளுக்கு

வரவிருக்கும் தலைமுறைகளுக்கு

இதேபோல் நடிகை ஆத்மிகா பதிவிட்டுள்ள டிவிட்டுள்ள டிவிட்டில் பிறந்தநாள் வாழ்த்துகள் சூர்யா சார் நீங்கள் எவ்வளவு நம்பமுடியாத நடிகர் மற்றும் அற்புதமான மனிதர் என்று சொல்ல வார்த்தைகள் இல்லை. கலைக்காக நீங்கள் கொடுக்கும் அர்ப்பணிப்பும் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு எப்போதும் தூண்டுதலாக இருக்கும். ஒரு சிறந்த வருடமாக இருக்க வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் நட்டி

நடிகர் நட்டி

இதேபோல் நடிகர் சிபி ராஜ் பதிவிட்டுள்ள டிவிட்டில் கடின உழைப்பின் சுருக்கம்.. சூர்யா அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து என பதிவிட்டுள்ளார். இதேபோல் நடிகர் நட்டி உட்பட பலரும் நடிகர் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X