விவேக்.. மனிதர்களின் மாரடைப்பை தடுக்கும் நகைச்சுவை பணியை தொடர வேண்டும்.. பிரபலங்கள் உருக்கம்!

சென்னை: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் நலம்பெற வேண்டி வருகின்றனர்.

Recommended Video

சின்ன கலைவாணர் விவேக்கிற்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விவேக்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு கார்டியாக் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எக்மோ சிகிச்சை

எக்மோ சிகிச்சை

ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர் செய்யும் வகையில் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திரைத்துறை பிரபலங்கள்

திரைத்துறை பிரபலங்கள்

இந்நிலையில் நடிகர் விவேக் விரைவில் நலம் பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர். இதேபோல் திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் நடிகர் விவேக் நலம் பெற வேண்டும் என தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நகைச்சுவை கலைப்பணி

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ள டிவிட்டில்,
சின்னக் கலைவாணர்
தம்பி விவேக்
விரைந்து நலமுற்று மீள வேண்டும்;
மனிதர்களின்
மாரடைப்பைத் தடுக்கின்ற
நகைச்சுவைக் கலைப்பணியை
வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும்.
வாழ்த்துகிறேன்.. என பதிவிட்டுள்ளார்.

அதிர்ச்சி அடைந்தேன்

நடிகர் சிபிராஜ் பதிவிட்டுள்ள டிவிட்டில், நடிகர் விவேக் சார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.. விரைவில் நலம் பெற வேண்டும் டியர் சார் என பதிவிட்டுள்ளார்.

எல்லோரின் பிரார்த்தனை

இதேபோல் இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ள டிவிட்டில், நடிகர் விவேக் சார் விரைவில் குணமாக வேண்டும்.. எங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் உங்களுடன் உள்ளது.. என பதிவிட்டுள்ளார்.

விரைவில் நலம்பெற வேண்டும்

இதேபோல் நடிகர் கிருஷ்ணா பதிவிட்டுள்ள டிவிட்டிலும் விரைவில் நலம் பெற வேண்டும் விவேக் சார் என பதிவிட்டுள்ளார்.

மிகச்சிறந்த மனிதர்

நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள டிவிட்டில், நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களுள் நடிகர் விவேக்கும் ஒருவர். மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X