Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
‘சென்னை டா... சென்னை சூப்பர் கிங்ஸ் டா...’ டிவிட்டரில் தெறிக்கவிடும் பிரபலங்களின் பாராட்டுக்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐப் பாராட்டி திரைப் பிரபலங்கள் டிவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதற்கு திரைப் பிரலங்கள் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் டிவிட்டர் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கி, மொத்தம், 51 நாட்கள் நடைபெற்றது. 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த போட்டியில் பங்கேற்றது.
பரபரப்பான லீக் சுற்று ஆட்டங்களை எல்லாம், கடந்து நேற்று நடந்த இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. வாட்சனின் அபாரா ஆட்டத்தில் சி.எஸ்.கே. அணி போட்டியை வென்று, 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
சி.எஸ்.கே.வின் இந்த வெற்றி அந்த அணி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. வெற்றி குறித்து பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் சினிமா பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை டிவீட் செய்துள்ளனர். யார் யார், என்ன டிவீட்னார்கள் என பார்க்கலாம்....
தெறிக்கவிடுவானே....
இசையமைப்பாளர் அனிருத் பதிவிட்டுள்ள டிவீட்டில், பிரேக் விட்டு வந்தாலும் தெறிக்கவிடுவானே என குறிப்பிட்டுள்ளார்.
பிறவி சாம்பியன்கள்...
இயக்குனர் வெங்கட் பிரபுவின் டிவீட்டில், நீங்கள் பிறவி சாம்பியன் என மீண்டும் வந்து உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளீர்கள். சி.எஸ்.கே. தான் உண்மையான சாம்பியன்ஸ்...
முறையான அழித்தொழிப்பு...
என்ன ஒரு ஆட்டம் ஷேன் வாட்சன் 33... இப்படி தான் ஒரு ஃபைனலில் விளையாட வேண்டும்..
நேரம் எடுத்து பொறுமை ஆட ஆரம்பித்து பின்னர் வெடிப்பது... முறையான அழித்தொழிப்பு...
அவரது மற்றொரு டிவீட்டில், சென்னை... சென்னை.. சூப்பர் கிங்ஸ்.. மஞ்சள் ராணுவம் மகிழ்ந்து கொண்டாடுகிறது... வாழ்த்துக்கள்
|
விசில் போடு...
நடிகை த்ரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில், மிகவும் பெருமையாக இருக்கிறது. விசில் போடு சி.எஸ்.கே.வுக்கு. வாட்சன்... என் சென்னை...
என்ன ஒரு ஆட்டம்..
நடிகை ராய் லட்சுமியின் டிவீட்டில், என்ன ஒரு ஆட்டம்.. சிறப்பாக ஆடியது சி.எஸ்.கே...
சி.எஸ்.கே. அணிக்கு வாழ்த்துக்கள்...
சென்னை டா....
நடிகை சுவேதா மேனனின் டிவீட்டில், சென்னை டா... சென்னை சூப்பர் கிங்ஸ் டா என கபாலி ஸ்டைலில் பதிவிட்டுள்ளார்.
உணர்வில் கலந்த சி.எஸ்.கே...
நடிகை பார்வதி நாயர் பதிவிட்டுள்ள டிவீட்டில், சி.எஸ்.கே. அணி மீண்டும் வரும்.. அதன் புகழை மீட்டெடுக்கும் என 2 ஆண்டுகளாக நாங்கள் பொறுமையாக காத்திருந்தோம். டியர் சி.எஸ்.கே... நன்றி. நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். நீங்கள் எங்கள் உணர்வுகளில் வாழ்கிறீர்கள். வி லவ் யூ...
விசில் போடு...
நடிகை நிக்கி கல்ராணியின் டிவீட்டில், சி.எஸ்.கே. அணிக்கு ஒரு விசில் போடு என தெரிவித்துள்ளார்.
|
வாட்சன்...
நடிகை சுஜா வருணியின் டிவீட்டில், 33 வாட்சன் என ஹார்டின் சின்னத்தை பதிவு செய்துள்ளார்.
வெற்றி மட்டும் தான் தெரியும்...
சுற்றியுள்ள பிரச்சினைக்கு இடையே, நாங்கள் சிரிப்பதற்கு ஒரு காரணத்தை கொடுத்திருக்கிறீர்கள் சி.எஸ்.கே.. அதற்காக நன்றி. நாங்கள் பெருமையுடன் சொல்வோம்.. எங்களுக்கு வெற்றி மட்டும் தான் டா தெரியும் என்று. சி.எஸ்.கே.வுக்கு ஒரு விசில் போடு....
|
இன்னும் என்ன வேண்டும்...
இயக்குனர் பிரியதர்ஷனின் டிவீட்டில், வேறென்ன வேண்டும்... வாட்சன்.. நீங்க தான் பெஸ்ட்.. சென்னை தான் பெஸ்ட்..
சினிமா பிரபலங்கள் தங்கள் டிவிட்டர் பக்கங்களில் சி.எஸ்.கே. அணிக்கு இவ்வாறு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!