காடு திருத்தி நாடமைத்தவர்.. சுழலும் உலகின் அச்சாணியாய்.. பிரபலங்கள் உழைப்பாளர் தின வாழ்த்து!

சென்னை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆண்டு தோறும் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள டிவிட்டில் காடு திருத்தி நாடமைத்தவர் உழைப்பாளர். அக்காலம் முதல், நவீன உலகின் சௌகரியங்களுக்காகத் தம் சக்தியைப் பங்களித்துவரும் உழைப்பாளர்களே நம் அன்றாட வாழ்வை இயக்குகின்றனர். சுழலும் உலகின் அச்சாணியாய் இலங்குவோருக்கு உழைப்பாளர் நாள் வணக்கங்கள்.. என பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ள டிவிட்டில், உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்திலும் பலகோடி தொழிலாளிகளின் வியர்வை அடங்கியிருக்கிறது.. உழைக்கும் மக்களை போற்றுவோம்.. இந்த கொரானா காலத்தில் தன்னுயிர் பொருட்படுத்தாமல் உழைத்த அத்தனை தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.. என தெரிவித்துள்ளார்.

மனோ பாலா

இதேபோல் இயக்குநர், நடிகர் என பல முகங்களை கொண்ட மனோபாலாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் லாரன்ஸ்

நடிகர் லாரன்ஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில், டியர் பிரண்ட்ஸ் அன்ட் ஃபேன்ஸ்.. உங்கள் அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் அஜித்துக்கும் அதே பதிவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் உடல் நலத்துடனும் செல்வ செழிப்புடனும் இருக்க ராகவேந்திரா சுவாமியிடம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரியோ ராஜ்

இதேபோல் நடிகர் ரியோ ராஜும் அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிறந்த நாள் வாழ்த்துகள் தல என நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X