Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காடு திருத்தி நாடமைத்தவர்.. சுழலும் உலகின் அச்சாணியாய்.. பிரபலங்கள் உழைப்பாளர் தின வாழ்த்து!
சென்னை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பிரபல நடிகர்.. குவிகிறது பாராட்டு!
8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காடுதிருத்தி நாடமைத்தவர் உழைப்பாளர். அக்காலம் முதல், நவீன உலகின் சௌகரியங்களுக்காகத் தம் சக்தியைப் பங்களித்துவரும் உழைப்பாளர்களே நம் அன்றாட வாழ்வை இயக்குகின்றனர். சுழலும் உலகின் அச்சாணியாய் இலங்குவோருக்கு உழைப்பாளர் நாள் வணக்கங்கள்.
— Kamal Haasan (ikamalhaasan) May 1, 2021
நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள டிவிட்டில் காடு திருத்தி நாடமைத்தவர் உழைப்பாளர். அக்காலம் முதல், நவீன உலகின் சௌகரியங்களுக்காகத் தம் சக்தியைப் பங்களித்துவரும் உழைப்பாளர்களே நம் அன்றாட வாழ்வை இயக்குகின்றனர். சுழலும் உலகின் அச்சாணியாய் இலங்குவோருக்கு உழைப்பாளர் நாள் வணக்கங்கள்.. என பதிவிட்டுள்ளார்.
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்திலும் பலகோடி தொழிலாளிகளின் வியர்வை அடங்கியிருக்கிறது.. உழைக்கும் மக்களை போற்றுவோம்.. இந்த கொரானா காலத்தில் தன்னுயிர் பொருட்படுத்தாமல் உழைத்த அத்தனை தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள். pic.twitter.com/hrdjea4YP1
— Cheran (directorcheran) May 1, 2021
இயக்குநர் சேரன்
இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ள டிவிட்டில், உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்திலும் பலகோடி தொழிலாளிகளின் வியர்வை அடங்கியிருக்கிறது.. உழைக்கும் மக்களை போற்றுவோம்.. இந்த கொரானா காலத்தில் தன்னுயிர் பொருட்படுத்தாமல் உழைத்த அத்தனை தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.. என தெரிவித்துள்ளார்.
உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்
— Manobala (manobalam) May 1, 2021
மனோ பாலா
இதேபோல் இயக்குநர், நடிகர் என பல முகங்களை கொண்ட மனோபாலாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்#HappyMAYDay 💪👍
— Sivakarthikeyan (Siva_Kartikeyan) May 1, 2021
நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Hi dear friend and Fans !
— Raghava Lawrence (offl_Lawrence) May 1, 2021
“May Day wishes to all” 💪
“உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்” ..
I wish Ajith sir a very happy birthday. I pray to Raghavendra Swamy for his good health and wealth.. pic.twitter.com/EYXdW1avwG
நடிகர் லாரன்ஸ்
நடிகர் லாரன்ஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில், டியர் பிரண்ட்ஸ் அன்ட் ஃபேன்ஸ்.. உங்கள் அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் அஜித்துக்கும் அதே பதிவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் உடல் நலத்துடனும் செல்வ செழிப்புடனும் இருக்க ராகவேந்திரா சுவாமியிடம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் 💪🏻
— Rio raj (rio_raj) May 1, 2021
Happy Happy Birthday Thala 🎉🎉🥳🥳 #HBDThalaAjith #HappyBirthdayThala pic.twitter.com/1hdc35qMIb
ரியோ ராஜ்
இதேபோல் நடிகர் ரியோ ராஜும் அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிறந்த நாள் வாழ்த்துகள் தல என நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.