நாட்டின் 71வது குடியரசு தினம்.. கோலாகல கொண்டாட்டம்.. சினிமா பிரபலங்கள் வாழ்த்து! #RepublicDay2020
சென்னை: நாட்டின் 71வது குடியரசுத் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சினிமா பிரபலங்களும் குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மலர் வளையாம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். நாட்டின் 71வது குடியரசு விழாவில் பிரேசில் அதிபர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழகம் உட்பட நாடு முழுவது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை மெரினாவில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் டி இமான் பதிவிட்டுள்ள டிவிட்டில் இந்த குடிமக்கள் அனைவருக்கும் குடியரசுத் தின வாழ்த்துகள் என தெரிவித்திருக்கிறார். இதேபோல் பட்டாசு பட நடிகை மெஹ்ரீனும் குடியரசு தின வாழ்த்து கூறி டிவிட்டியிருக்கிறார்.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு நடிகர் விவேக் போரூர் பள்ளியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரக்கன்று நட்டார். இதுதொடர்பான வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் இந்தியத் தாய்க்கு குடியரசு தின வணக்கம்.. என தெரிவித்துள்ளார்.
இதேபோல் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன் லால் மற்றும் நிவின் பாலி ஆகியோரும் குடியரசு தின வாழ்த்துக்களை தங்களின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications