twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேற மாறி வெற்றி.. ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்த இந்திய இளம் படை.. பிரபலங்கள் என்ன சொல்றாங்க பாருங்க!

    |

    சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி அசத்தலாக ஆடி வென்றுள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தொடரை கைப்பற்றியதை பார்த்த சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இந்திய அணியையும் இளஞ்சிங்கங்களையும் வாழ்த்தி வருகின்றனர்.

    கோஹ்லி ரெஸ்ட் எடுத்துள்ள நிலையில், ரஹானே தலைமையில் இந்திய அணி இந்த அபார வெற்றியை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வரலாற்று வெற்றி

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய வெற்றி என நடிகர் சிவகார்த்திகேயன் இந்திய அணியை பாராட்டி வாழ்த்தி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மற்றும் டெஸ்ட் கேப்டன் ரஹானேவுக்கு தனது வாழ்த்துக்களை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இப்படித்தான் மேட்ச் பார்த்தேன்

    என்ன ஒரு கிளாசிக்.. எப்போதுமே மறக்க முடியாத தருணமாக இது மாறிவிட்டது. 38 வருடத்தில் 36 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இருந்து தற்போது, ரிஷப் பன்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர், சிராஜ், ஷர்துல் மற்றும் கேப்டன் அஜின்கே ரஹானே என எல்லாருமே சாம்பியன்கள் தான்.. வீட்டில் இப்படித்தான் கிரிக்கெட் பார்த்தேன் என லுங்கியோடு, சோபாவுக்கு மேல் நின்று டிவி பார்க்கும் போட்டோவை போட்டுள்ளார் சித்தார்த். போட்டோ எடுத்தது சித்தார்த்தின் அம்மா என்றும் அவங்களோட பிறந்தநாள் அதுவுமா இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது ரொம்ப ஹேப்பி என்றுள்ளார்.

    விக்னேஷ் சிவன் பாராட்டு

    வாட்ட விக்டரி.. 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் இருந்து டெஸ்ட் தொடரையே வெற்றிப் பெற்ற பெருமையான தருணம் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார். இந்த அழகான ஆண்டின் அழகான தருணம் இதுதான். ஏகப்பட்ட படிப்பினைகளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் சீரிஸ் கற்றுக் கொடுத்துள்ளது என்றார்.

    ராஜமெளலி படக்குழு

    இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படக்குழு டெஸ்ட் தொடரை வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. வரலாறு மீண்டும் திருத்தி எழுதப்பட்டது. இந்திய இளம்படை ஒளிருது, ஒற்றுமையின் சின்னம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று ட்வீட் போட்டுள்ளனர்.

    டிம் பெய்னேவுக்கு பெயின்

    ரிஷப் பன்ட் ஆன் ஃபயர்.. டைம் ஃபார் பெயின் ஃபார் டிம் பெய்னே என நடிகை கஸ்தூரி செம ட்வீட் போட்டு இந்தியாவின் வெற்றியை கொண்டாடி உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டிம் பெய்னேவுக்கு இது மிகுந்த வலியை கொடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 1988ம் ஆண்டுக்கு பிறகு கப்பாவில் ஆஸ்திரேலிய அணி மண்ணை கவ்வியுள்ளது என்றும் இந்திய வீரர்களின் திறமைகளை வெகுவாக பாராட்டியுள்ளார். ஏகப்பட்ட தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் என பலரும் இந்திய அணியை வாழ்த்தி வருகின்றனர்.

    English summary
    Cinema celebrities wishes Indian Cricket team for historic win against Australia. Celebrities like Sivakarthikeyan, Vignesh Shivan, Siddharth, Kasturi and so many others tweet about India’s victory.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X