துவம்சமான நியூசிலாந்து.. சாம்பியன்ஸ் டிராபியை தட்டித்தூக்கிய இந்தியா.. பிரபலங்கள் வாழ்த்து மழை!

சென்னை: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் இன்று அதாவது மார்ச் 9ஆம் தேதி மோதிக்கொண்டது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு ரசிகர்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி 2025 இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் இலக்கை துரத்திய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Cinema Celebrities Wishes Indian Cricket Team Won ICC Champions Trophy 2025 Against New Zealand

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி சார்பாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் குவித்தார். அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களும், கே.எல். ராகுல் 34 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய அங்கம் வகித்தார்கள். இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்காமல் கோப்பையை வென்றுள்ளது. கடந்த ஆண்டு இதேபோல், இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அதேபோல், ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் உலகக்கோப்பையை இழந்தது.

Cinema Celebrities Wishes Indian Cricket Team Won ICC Champions Trophy 2025 Against New Zealand
மம்மூட்டி: ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளதால், அவருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் சோனு சூட் தனது வாழ்த்தில் நமது கதாநாயகர்களுக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.


சிரஞ்சீவி: பாலிவுட் நடிகர் அனுபம் கெர் விமானத்தில் இருந்தபடி தான் எடுத்த வீடியோவைப் பகிர்ந்து, நான் இப்போதுதான் மும்பைக்கு வந்து சேர்ந்தேன். இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 ஐ வென்றுள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துகள் ஜெய் ஹிந்த்! என பதிவிட்டுள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது வாழ்த்தில், பெருமையோடும் உச்சகட்ட மகிழ்ச்சியோடும் இருக்கிறேன். இந்திய அணிக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இந்தியா முழுவதும் உள்ள திரைப்பிரபலங்கள் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஐசிசி: ரோகித் சர்மா தலைமையில் இந்த அணி வெல்லும் இரண்டாவது ஐசிசி டிராபி இது. ஏற்கனவே கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அதேபோல் கடந்த ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் அதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைச் சந்தித்தது. இறுதிப் போட்டி வரை தோல்வியைச் சந்திக்காமல் வந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கவலையையும் அளித்தது. ஆனாலும் அதே ஆண்டில் டி20 உலகக் கோப்பையை ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் வென்றது. அதேபோல், தற்போது ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல், சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X