ரிலீசானது விருமன் படம்.. படத்தின் சக்சசுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை : நடிகர் கார்த்தியின் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது விருமன் படம்.

Recommended Video

Director Muthaiyah Speech | எனக்கு ஒரு எல்லை வைச்சிருக்கேன் | Viruman *Kollywood

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கிராமத்து இளைஞன் வேடத்தில் இந்தப் படத்தில் கார்த்தி நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

படத்தில் அவருடன் அதீதி ஷங்கர் இணைந்துள்ள நிலையில், இந்த காம்பினேஷன் மிகவும் அதிகமான எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அதை பூர்த்தி செய்யும் வகையில் படத்திற்கான நல்ல விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி பருத்தி வீரன், கொம்பன், கடைக்குட்டி சிங்கம் என கிராமத்து கெட்டப்புகளில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தனது முதல் படத்திலேயே கிராமத்து கெட்டப்பில்தான் நடித்தார். பருத்தி வீரனில் இவரது டயலாக் டெலிவரி, உடல்மொழி அனைத்தும் சிறப்பாக பார்க்கப்பட்டன.

விருமன் படம்

விருமன் படம்

இந்நிலையில் தற்போது சுல்தான் படத்திற்கு பிறகு ஒரு ஆண்டு இடைவெளியில் தற்போது இவரது விருமன் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், படம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2வது முறையாக கூட்டணி

2வது முறையாக கூட்டணி

தமிழகமெங்கும் 475 திரையரங்குகளில் விருமன் படம் ரிலீசாகியுள்ளது. காலை சிறப்பு காட்சிகளுடன் இந்தப் படம் ரிலீசாகியுள்ள நிலையில், காலையில் திரையரங்குகளில் சென்று ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்தை பார்த்தனர். இயக்குநர் முத்தையா -கார்த்தி இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது.

கொம்பன் படத்தில் ஹிட்டடித்த கூட்டணி

கொம்பன் படத்தில் ஹிட்டடித்த கூட்டணி

முன்னதாக இந்தக் கூட்டணி, கொம்பன் படத்தில் இணைந்து சூப்பர் ஹிட்டடித்தது. இதனிடையே விருமன் படத்தையும் சிறப்பாக உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஆக்ஷன் மற்றும் காமெடி காட்சிகளில் கார்த்தி அசத்தியுள்ளார். நாயகியாக நடித்துள்ள அதீதி ஷங்கருக்கு அதிகமான எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அவர் அதை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார்.

 மதுர வீரன் பாடலை பாடிய அதீதி

மதுர வீரன் பாடலை பாடிய அதீதி

யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தில் மதுர வீரன் என்ற பாடலையும் அதீதி பாடியுள்ளார். இந்தப் பாடலும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்தப்படம் சிறப்பான வெற்றியை பெற பிரபலங்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்கைளை பகிர்ந்து வருகின்றனர்.

 கௌதம் கார்த்திக் பாராட்டு

கௌதம் கார்த்திக் பாராட்டு

நடிகர் கௌதம் கார்த்திக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படம் கண்டிப்பாக சக்சஸ் பெறும் என்றும் அதற்கு முழுத்தகுதியான படம் என்றும் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவினரின் பெயர்களை தனித்தனியாக குறிப்பிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். விக்ரம் பிரபுவும் படத்திற்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாண்டிராஜ் வாழ்த்து

இயக்குநர் பாண்டிராஜ் வாழ்த்து

தன்னுடைய லிஸ்ட்டில் அடுத்த வெற்றியை சேர்த்த கார்த்திக்கு இயக்குநர் பாண்டிராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். அதீதியை கோலிவுட்டில் அவர் வெல்கம் செய்துள்ளார். இதேபோல படக்குழுவினருக்கும் அவர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதீதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஷங்கர் மற்றும் ஈஸ்வரி மிகவும் பெருமை கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் பாராட்டு

தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் பாராட்டு

தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் திரையுலக உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களும் விருமன் படத்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். மொத்தத்தில் விருமன் தீ திரையரங்குகளில் பற்றியுள்ளதாக இந்தப் படத்திற்கு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X