ஆட்சிக் கட்டிலில் திமுக.. முதல் முறையாக சட்டசபையில் தடம் பதிக்கும் உதயநிதி.. பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது திமுக.

சினிமா பிரபலங்கள் வாழ்த்து

சினிமா பிரபலங்கள் வாழ்த்து

இதேபோல் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக எம்எல்ஏவாகி சட்டசபைக்கு செல்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கோட்டைக்கு போகும்

நகைச்சுவை நடிகை ஆர்த்தி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள ட்வீ ட்டில் வேட்டைய விட்டு கோட்டைக்கு போகும் நம்ம சுடலைமாட சாமிக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.. என பதிவிட்டுள்ளார்.

மக்கள் தீர்ப்பு

இதேபோல் நடிகை ஆர்த்தி உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள ட்வீ ட்டில் சூப்பர் ஃபன்டாபுளஸ் வெற்றி புரோ.. இந்த வெற்றியை ருசிக்க நீங்கள் நிறை தடைகளை நசுக்கியுள்ளீர்கள்.. வாழ்த்துகள் ராக் ஸ்டார் என பதிவிட்டுள்ளார்.

தடைகளை நசுக்கி

இதேபோல் நடிகர் சூரி பதிவிட்டுள்ள ட்வீ ட்டில் முதன் முதலில் சட்டமன்றத்தில் தடம் பதிக்கும் உதயநிதி ஸ்டாலின் பிரதர் அவர்களுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

சட்டசபையில் தடம்

பாடகர் கிரிஷ் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், இந்த மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஸ்டாலின் அங்கிள் மற்றும் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் நண்பர் அன்பில் மகேஷ் என பதிவிட்டுள்ளார்.

மிகப்பெரிய வெற்றி

நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், ஜெயலலிதாவுக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர். வாழ்த்துகள் ஸ்டாலின்.. மீளக்கூடிய ஆணையில்.. எங்கள் அனைவரின் நலனுக்காக நீங்கள் சிறந்த ஆட்சியைக் கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன். நாங்கள் அனைவரும் உங்களை எதிர்பார்ப்புகளுடனும் கேள்விகளுடனும் பார்க்கிறோம்.. வாழ்க தமிழ் என பதிவிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு பிறகு

நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஜெயலலிதாவுக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர். வாழ்த்துகள் ஸ்டாலின்.. மீளக்கூடிய ஆணையில்.. எங்கள் அனைவரின் நலனுக்காக நீங்கள் சிறந்த ஆட்சியைக் கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன். நாங்கள் அனைவரும் உங்களை எதிர்பார்ப்புகளுடனும் கேள்விகளுடனும் பார்க்கிறோம்.. வாழ்க தமிழ் என பதிவிட்டுள்ளார்.

நெடுந்தூரம் தொடரட்டும்

இதேபோல் மூடர்கூடம் இயக்குநர் நவீன் முகமதலியும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், தங்களுடைய இந்த வெற்றி சமூகநீதி பாதையில் நெடுந்தூரம் தொடரட்டும். இம்மியளவும் கொள்கையிலிருந்து விலகாமல் சேவை செய்ய வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X