ஏளனம் செய்தவர்களின் முன் எடுத்துக்காட்டாக நிமிர்ந்து நிற்கிறீர்.. ஸ்டாலினுக்கு பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழ் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
Recommended Video
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பெற்றுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பிரபலங்கள் வாழ்த்து
ஸ்டாலினுடன் சேர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலைய்ல புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசுக்கும் முதல்வராக பதவியேற்றுள்ளா திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏளனம் செய்தவர்கள் முன்
அந்த வகையில் நடிகை ஆர்த்தி பதிவிட்டுள்ள டிவிட்டில், 50வருட உழைப்பு.. தொண்டன்.. முடியாது என ஏளனம் செய்தவர்களின் முன் எடுத்துக்காட்டின் உதாரணமாக நிமிர்ந்து நிற்கிறீர்.. உளமாற பெருமைகொள்கிறேன்.. இனி இந்த தமிழகமே உங்கள் குடும்பம்.. நல்லா பாத்துபீங்க.. நம்பிக்கையிருக்கு.. என பதிவிட்டுள்ளார்.

50 ஆண்டு ஓட்டம்
இதேபோல் இயக்குநர் ரத்னகுமார் பதிவிட்டுள்ள டிவிட்டில் 50 ஆண்டுகள் ஓட்டம். அநேகமாக ஆட்சி அதிகாரத்தை பெற மிக நீண்ட பயணம் என ஸ்டாலின் கடநந்து வந்தப் பாதையை நினைவு கூர்ந்துள்ளார்.

வாழ்த்துகள்
இதேபோல் இயக்குநரும் நடிகருமான மனோ பாலாவும் முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், பதவி ஏற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும்..மற்ற அமைச்சர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.. என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் எனும் நான்
இதேபோல் நடிகர் கிருஷ்ணா பதிவிட்டுள்ள டிவிட்டில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என ஸ்டாலின் கூறியதை குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடங்குகிறது என்றும் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் சார் மற்றும் அமைச்சர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

சவால்களை தகர்க்கும்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ள டிவிட்டில், பத்து ஆண்டுகள் கழித்து மக்கள் நம்பிக்கையோடு முதல்வர் பதவியைத் தந்துள்ளார்கள். சீரும் சிறப்புமாக தமிழகத்தை தலை நிமிர் மாநிலமாக, கொள்கைப் பிடிப்போடு உயரும் மாநிலமாக, எதிர் நிற்கும் சவால்களை தகர்க்கும் மாநிலமாக மாற்ற வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

மதச்சார்பற்ற தமிழ்நாடு
இதேபோல் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆல் த வெரி பெஸ்ட் ஸ்டாலின் சார்.. இங்கே ஒரு வலுவான பாதுகாப்பான மற்றும் மதச்சார்பற்ற தமிழ்நாடு உள்ளது என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











