கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றிய விஜய் வசந்த்.. வாழ்த்து மழை பொழியும் சினிமா பிரபலங்கள்!

சென்னை: கன்னியாகுமரி தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் விஜய் வசந்துக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

விஜய் வசந்த் போட்டி

விஜய் வசந்த் போட்டி

இதையடுத்து திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த போட்டியிட்டார்.

சூறாவளி பிரசாரம்

சூறாவளி பிரசாரம்

இதேபோல், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இத்தொகுதி வழங்கப்பட்டது. பாஜக சார்பில் கடந்த முறை வசந்தகுமாரிடம் தோல்வியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டார். இருவருமே சூறாவளி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.

விஜய் வசந்த் வெற்றி

விஜய் வசந்த் வெற்றி

இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட வசந்த குமாரின் மகன் விஜய் வசந்த் வெற்றி பெற்றார். அவருக்கு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மக்களுக்கு நல்லதை செய்யுங்கள்

பிரபல தொகுப்பாளினியான டிடி பதிவிட்ட ட்வீ ட்டில், இந்த வெற்றிக்கு பல வாழ்த்துகள் சகோதரா.. மக்களுக்கு உங்களால் முடிந்த நல்லதை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

உங்கள் அப்பாவின் சேவை

நடிகர் சரத்குமார் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில் வாழ்த்துகள் விஜய், உங்கள் தந்தையின் சேவையையும் மரபையும் தொடருங்கள்.. உங்களின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

களத்துல கலக்குங்க

இதேபோல் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், விஜய் வசந்த்ணா உங்களுக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.. களத்துல கலக்குங்க.. கடவுளின் ஆசீர்வாதம் என குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவின் ஆசிர்வாதம்

இதேபோல் பாடகர் கிரிஷ் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில் இந்த வெற்றிக்காக வாழ்த்துகள் விஜய் வசந்த்.. இது உங்கள் அப்பாவின் ஆசிர்வாதம் தான் வேறொன்றும் இல்லை.. சிறப்பாய் செய்யுங்கள் சகோ என்று பதிவிட்டுள்ளார்.

யூ நெய்ல்டு இட்

இதேபோல் இயக்குநர் அகமது பதிவிட்டுள்ள ட்வீ ட்டில் யூ நெய்ல்டு இட்.. நீங்கள் பல வெற்றிகளை பெற வேண்டும் கடவுளின் ஆசிர்வாதம் என பதிவிட்டுள்ளார்.

வாழ்த்துகள் டார்லிங்

இதேபோல் நடிகர் ஷாந்தனு பதிவிட்டுள்ள ட்வீ ட்டில் வாழ்த்துகள் டார்லிங்.. உங்கள் அப்பாவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X