சினிமாவில் உங்களின் பங்களிப்பு தனித்துவமானது.. கமலுக்கு பிரபலங்கள் வாழ்த்து மழை!

Recommended Video

Kamal Hassan Success Secrets: எதிர்காலத்தை கணித்த கமல் படங்கள்

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன் ஒருபகுதியாக கமலின் சொந்த ஊரான பரமக்குடியில் பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது.

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் நள்ளிரவு முதல் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டி வருகின்றனர். சினிமாவில் 60 ஆண்டுகள் அவர் படைத்திருக்கும் சாதனையை பாராட்டி பிரபலங்கள் பலரும் கமலுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

தனித்துவமானது.

அந்த வகையில் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு பதிவிட்டுள்ள டிவிட்டில், பிறந்தநாள் வாழ்த்துகள் சார்.. சினிமாவில் உங்கள் பங்களிப்பு தனித்துவமானது.. சினிமாவில் 60 ஆண்டுகளை நிறைவு செய்தற்கு வாழ்த்துகள். இது உண்மையிலே ஊக்குவிக்கிறது.. மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் நிறைந்த ஒரு அற்புதமான ஆண்டு உங்களுக்கு இருக்கட்டும் என தெரிவித்திருக்கிறார்.

தொலைந்து போவோம்

நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ள டிவிட்டில், லெஜென்டிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. சார் சினிமாவுக்காக நீங்கள் செய்த எல்லாவற்றிற்கும், மிக முக்கியமாக வருங்கால சந்ததியினருக்கு சினிமாவை புரிந்துகொள்வதற்கும், மதிப்பதற்கும், கனவு காண்பதற்கும் சாத்தியமாக்கியதற்கு நன்றி. நீங்கள் இல்லாமல் நாங்கள் தொலைந்து போவோம். நன்றி அய்யா.. என பதிவிட்டிருக்கிறார்.

கமல் இருக்கிறார்..

பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ள பதிவில்...
‘ஏன் தமிழ் சினிமா எல்லாவற்றிலும் சிறந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?' என்று யாராவது என்னிடம் கேட்டால்.. நான் ‘இந்த கிளிப்களை காண்பிப்பேன், எங்களிடம் இருப்பதைக் கூறுவேன்.. கமல்ஹாசன் ஐயா இங்கே இருக்கிறார். மிகப் பெரியவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இந்த க்ளிப்பில் நான் அன்பே சிவத்தை சேர்க்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அன்றும் இன்றும்..

இயக்குநர் நவீன் பதிவிட்டிருக்கும் டிவிட்டில், அன்றும் இன்றும் என்றும் நான் கண்டு வியக்கும்.. என் கமல் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X