twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமேசான் காட்டில் தீ: பூமியின் நுரையீரல் பற்றி எரிகிறது.. ஆபத்தை உணருங்கள்.. பதறும் பிரபலங்கள்!

    |

    Recommended Video

    கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு... வெளிவரும் உண்மைகள்

    சென்னை: அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து சினிமா பிரபலங்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    உலகிலேயே மிகப்பெரிய காடாகா அமேசான் காடு உள்ளது. இந்த வனப்பகுதி மழைக்காடுகள் என்றும் அழைக்கப்படுகிறுது.

    அமேசான் காட்டில் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள், ஏராளமான விலங்குகள், பறவைகள் என உள்ளன. பூமிக்கு தேவையான 20 சதவீத ஆக்ஸிஜனை இந்த அமேசான் காடுகள்தான் வழங்கி வருகின்றன.

    வனிதாவைப் பார்த்து ஹவுஸ்மேட்ஸுக்கு மட்டுமில்ல.. பிக் பாஸுக்கே பயம் தான்.. இல்லாட்டி அப்டி சொல்வாரா? வனிதாவைப் பார்த்து ஹவுஸ்மேட்ஸுக்கு மட்டுமில்ல.. பிக் பாஸுக்கே பயம் தான்.. இல்லாட்டி அப்டி சொல்வாரா?

    காட்டுத் தீ

    காட்டுத் தீ

    பூமி மழை பெறவும் இந்த காடுகள் பேருதவி புரிகின்றன. இந்நிலையில் இந்த காட்டில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. பற்றி எரியும் காட்டுத் தீ காற்றின் வேகத்தால் மளமளவென காடு முழுவதும் பரவி வருகிறது.

    அணைக்கும் முயற்சி

    அணைக்கும் முயற்சி

    இதனால் இதுவரை பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி தீக்கு இரையாகிவிட்டது. தீயை அணைக்கும் முயற்சியில், பிரேசில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    பிரபலங்கள் வேதனை

    பிரபலங்கள் வேதனை

    ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன. இந்நிலையில் அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து இந்திய சினிமா பிரபலங்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    பூமியின் நுரையீரல் எரிகிறது

    இதுதொடர்பாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டிருக்கும் டிவிட்டில், பூமியின் நுரையீரல் பற்றி எரிகிறது. பல்லுயிர் பாதிக்கப்படுகிறது. நமது பூமியை பாதுகாக்க நம்மால் முடிந்ததை செய்வோம். பசுமையை பாதுகாக்க ஒரு படி முன்னே செல்லுங்கள். வீட்டிலேயே இதனை ஆரம்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

    இது ஒரு அலாரம்

    அவரது மற்றொரு பதிவில் ரொம்பவும் கவலையான செய்தி, அமேசான் மழைக்காடுகள் பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும், பூமிக்கு தேவையான ஆக்ஸிஜனில் 20 சதவீதத்தை வழங்கும் காடுகள் பற்றி எரிகின்றன. இது நம் கிரகத்தை பாதுகாக்க அனைவருக்கும் விழித்தெழுவதற்கான ஒரு அலாரம். இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் நடிகர் மகேஷ் பாபு.

    நடிகர் ஆயுஷ்மான் குரானா

    இந்தி நடிகரான ஆயுஷ்மான் குரானா பூமியின் நுரையில் பல வாரங்களாக பற்றி எரிகிறது என அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    நடிகர் அர்ஜூன் கபூர்

    நடிகர் அர்ஜூன் கபூர் பதிவிட்டுள்ள டிவிட்டில் அமேசான் மழைக்காடுகளில் எவ்வளவு மோசமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது, பயமாக இருக்கிறது !! இது உலக சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    நடிகர் அக்ஷய்குமார்

    நடிகர் அக்ஷய் குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில் 2 வாரங்களுக்கும் மேலாக பற்றி எரியும் அமேசான் மழைக்காடுகளின் ஆபத்தான இதயத்தை உடைக்கும் படங்களை பார்க்கிறேன். அமேசான் காடுகள் உலகின் 20% ஆக்ஸிஜனுக்குக் காரணமாகும். இது நம் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. பூமி காலநிலை மாற்றத்தைத் தக்கவைக்கலாம் ஆனால் நாம் தக்கவைக்க மாட்டோம் என பதிவிட்டுள்ளார்.

    நடிகை ஆலியா பட்

    நடிகை ஆலியா பட் பதிவிட்டுள்ள டிவிட்டில் நம் கிரகத்தின் நுரையீரல் பற்றி எரிகிறது. 3 மில்லியன் செடிகொடிகள் மற்றும் விலங்குகள், ஒரு மில்லியன் பழங்குடி மக்களின் வீடாக உள்ளது அமேசான் காடுகள். கார்பன் டை ஆக்ஸைடு அளவை கட்டுப்படுத்துவதில் அமேசான் காடுகள் முக்கிய இடம் வகிக்கின்றன. அது இல்லாமல் நாம் இருக்க மாட்டோம்! என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    Cinema celebrities worrying about Amazon rain forest fire.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X