அனிருத், ஆண்ட்ரியா காதல் முறிவுக்கு காரணம் இதுதானா.. பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: அனிருத், ஆண்ட்ரியா இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரின் பிரிவுக்கு காரணம் அந்த விஷயம் தான் என பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையான ஆண்ட்ரியா, நடிகை மட்டுமில்லை சிறந்த பாடகியும் ஆவார்.

இவர் அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா...மாமா ஊஊ சொல்றியா மாமா என பாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்துவிட்டார்.
அனிருத், ஆண்ட்ரியா: தனுஷ் இயக்கிய 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் தனது முதல் படத்திலேயே கொலவெறியான மாஸ் பாடலை கொடுத்து உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இவர் எந்த அளவிற்கு பிரபலம் ஆனாரோ அந்த அளவிற்கு சர்ச்சையிலும் சிக்கினார். அனிருத், ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருவரது பெயரையும் டேமேஜ் ஆக்கியது.
பிரிவுக்கு காரணம்: இதையடுத்து இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. அது உண்மை என்பது போல ஆண்ட்ரியாவும் ஆன் ஸ்கிரினில் தென்படாமல் இருந்தார். இருவரின் பிரிவுக்கு காரணம் வயது வித்தியாசம் தான் என சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். இதே தகவலை அனிருத்தும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்து எழுந்த சர்ச்சை: அனிருத் சினிமாவிற்குள் என்ட்ரியான போது, அவருக்கு வெறும் 19 வயது, ஆனால், ஆண்ட்ரியாவிற்கு 25வயது. தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை காதலித்தது தான் இவர்களின் காதல் முறிவுக்கு முக்கிய காரணம் என்றும், அதே போல நடிகை ஆண்ட்ரியா குறித்து அந்த நேரத்தில் வெளியே வந்த சர்ச்சையால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக அந்த பிரபலம் தெரிவித்துள்ளார்.
மாஸ்காட்டும் அனிருத்: தன்னை பற்றி எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், அனிருத் படத்திற்கு இசையமைப்பதில் மும்முரமாக இருக்கிறார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அனிருத்தின் இசை தான் என்று சொல்லும் அளவிற்கு சும்மா மிரட்டிவிட்டார். கோலிவுட்டில் மாஸ் காட்டிவந்த அனிருத் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது வேட்டையை தொடங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











