Don't Miss!
- News
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் தண்ணீர் தொட்டியில் ஊழியர் மரணம்.. 7 நாட்களாக கிடந்த சடலம்
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய்யை ஜெயிக்கணும்னா... அஜித்துக்கு ரசிகர்கள் தேவை!
சென்னை : தமிழ் சினிமாவில் இப்பொழுது உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டு உள்ளவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித்.
சமகாலத்தில் அறிமுகமான இவர்கள் திரைத்துறையில் போட்டியாளராக கருதப்படுகின்றனர். இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளனர்
இந்த நிலையில் விஜய்யை ஜெயிக்கணும்னா அஜித்துக்கு ரசிகர்கள் தேவை என பிரபல சினிமா விமர்சகர் ஓபனாக பேசினார்.
விஜய், அஜித், தனுஷ்.. தங்கர் பச்சான் மகன் விஜித்துக்கு பாண்டிராஜ், ஆரி சொன்ன பலே உதாரணங்கள்!

வசூலில் மாறி மாறி சாதனை
அஜித் மற்றும் விஜய் என இருவருக்கும் தமிழ் சினிமாவில் சரிசமமாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். சமூக வலைதளங்களில் என்றாலும் சரி திரையரங்குகளில் என்றாலும் சரி இவர்களது ரசிகர்களுக்கு இணை இவர்களே என என்று சொல்லலாம். ஒவ்வொரு முறையும் அஜித்-விஜய் படங்கள் வெளியாகும் போதும் வசூலில் மாறி மாறி சாதனை செய்து வருகின்றன. விஜய்க்கு கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்,ஆண்ட்ரியா, சந்தானம்,கௌரி கிஷான் என பலர் நடித்திருந்த அந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி பட்டையக் கிளப்பியது.

முழுக்க முழுக்க ஆக்ஷனில்
நேர்கொண்ட பார்வை படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அஜித் முழுக்க முழுக்க ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருந்த இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வலிமை வசூலிலும் பெரிதாக சாதனை செய்யவில்லை என்ற தகவல்களும் தற்போது வெளியாகி வருகிறது.

விஜய் ஒரு ஸ்டெப் மேலே
இந்த நிலையில் அஜித், விஜய் குறித்து பிரபல விமர்சகர் அந்தனன் பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது விஜய்யும் அஜித்தும் சமகாலத்தில் வளர்ந்தவர்கள் ஆனால் இப்பொழுது விஜய்யை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது விஜய் ஒரு ஸ்டெப் மேலேதான் இருக்கிறார்.
சம்பள விஷயத்திலும் சரி ரசிகர்களை அரவணைப்பு போவதிலும் சரி விஜய் தான் மேலே உள்ளார். இது ஒரு போட்டி நிறைந்த உலகம் என்ன தான் எனக்கு கிடைத்த உயரம் போதும் எனக்கு கிடைத்த சம்பளம் போதும் என அஜித் நினைத்தாலும் கூட அவரது போட்டியாளர் விஜய்.

அஜித்துக்கு ரசிகர்கள் தேவை
விஜய் சம்பந்தப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் அல்லது டீசர் வெளிவந்தது என்றாலே அன்னைக்கே அஜித் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் வருது அப்ப என்ன காரணம் விஜய் தன்னுடைய போட்டியாளர் நான் உன்னை விடமாட்டேன். அப்படியிருக்கையில் இறுதிவரை நீயா நானா என பார்க்கலாம் என சொல்ல வேண்டும் என்றால் ரசிகர்கள் பக்கத்தில் அஜித் நிற்க வேண்டும் என்று பிரபல விமர்சகர் அந்தனன் பேசியுள்ளார்.