Actor Dhanush: வடசென்னை, புதுப்பேட்டை சாயலில்தான் ராயன் படம் இருக்கும்.. அந்தணன் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் தனுஷ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ், சந்திப் கிஷன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ராயன் படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்கி முக்கியமான கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார். நீண்ட காலங்களுக்கு பிறகு அவர் இந்த படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்தை கையில் எடுத்துள்ளார்.

தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை பார்த்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் எந்த வகையிலும் காட்சிகளில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்ததாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்தின் கதைககளம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Dhanush Raayan Anthanan tamil cinema

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள படம் ராயன். இன்னும் சில தினங்களில் இந்த படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தை இயக்கி முக்கியமான கேரக்டரில் நடித்தும் உள்ளார் தனுஷ். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அவருடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் லீட் கேரக்டர்களில் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.

ராயன் குறித்து அந்தணன் ஷேரிங்: இம்மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரமாண்டமாக நடந்த நிலையில் இந்த இசை வெளியீட்டில் ஏராளமான ரசிகர்களை கவரும் வகையில் தனுஷ் பல தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார். படம் வடசென்னையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து பல்வேறு தகவல்களை பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் பகிர்ந்து வருகிறார். படத்தில் வடசென்னை, புதுப்பேட்டை படங்களின் சாயல் கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதே போல இயக்குநர் வெற்றிமாறனின் வழியில் இந்த படத்தை தனுஷ் இயக்கியுள்ளதாக அந்தணன் தெரிவித்துள்ளார்.

இன்னொரு வெற்றிமாறன் தனுஷ்?: ராயன் படத்தின்மூலம் இன்னொரு வெற்றிமாறன் என்ற அளவில் தனுஷ் பெயர் பெறுவார் என்றும் அவர் கூறியுள்ளார். ராயன் படம் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தனுஷ் கவர்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படம் இரண்டரை மணி நேரங்கள் மட்டுமே இருந்த நிலையில் மேலும் படத்தை கிரிஸ்ப் ஆக்கும் நிலையில் வகையில் படத்தின் காட்சிகளை மேலும் 12 நிமிடங்களுக்கு படக் குழுவினர் குறைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தில் எஸ்ஜே சூர்யாவின் கேரக்டரும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று அந்த தன்னுடைய பேட்டியில் அந்தணன் தெரிவித்துள்ளார்.

இயக்குநராக தனுஷ் தடம் பதிப்பார்: மேலும் இயக்குநராக தனுஷ் தடம் பதிப்பார் என்றும் கோலிவுட்டில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருவதாகவும் அந்தணன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அவரது இயக்கத்தில் மீண்டும் புதிய படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அந்தணன் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தின் கதையையும் உருவாக்கியுள்ளதாக இயக்குநரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா தனது பேட்டியொன்றில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X