இந்தியன் 2, ராயன் படங்களைவிட அந்தகன் எவ்வளவோ மேல்.. பாராட்டிலும் ட்விஸ்ட் வைத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அந்தகன் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. தொடர்ந்து அந்தகன் படம் பாராட்டுக்களுடன் வசூலையும் குவித்து வருகிறது.
இந்தப்படத்தின்மூலம் தன்னுடைய ரீ -என்ட்ரியை பிரஷாந்த் சிறப்பாக செய்துள்ளதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநரும் சினிமா விமர்சகர்மான ப்ளூ சட்டை மாறனும் பிரசாந்த் ஈஸ் பேக் என்று தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனாலும் கமல்ஹாசன், தனுஷ் ஆகியோரை வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அந்தகன் படம்: நடிகர் பிரஷாந்தின் ரீ-என்ட்ரி படமாக வெளியாகி உள்ளது அந்தகன். நேற்றைய தினம் ரிலீசான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் விமர்சகர்களும் சிறப்பான வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். அந்தாதூன் என்ற பாலிவுட் படத்தில் ரீமேக்காக அந்தகன் படம் தமிழில் உருவாகியுள்ளது. பிரசாந்தின் அப்பாவும் பிரபல இயக்குனர், தயாரிப்பாளருமான தியாகராஜன் இந்த படத்தை இயக்கி தயாரித்துள்ளார். அவருக்கும் இந்த படம் சிறப்பாகவே அமைந்துள்ளது. படத்தில் கண் தெரியாதவராக நடித்து மாஸ் காட்டியுள்ளார் பிரஷாந்த். படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களின் கேரக்டர்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
ப்ளூ சட்டை மாறன் பாராட்டு: குறிப்பாக சிம்ரனின் வில்லத்தனம் படத்திற்கு சிறப்பாக கை கொடுத்துள்ளது. அவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாராட்டுகளை அள்ளி வருகிறார். படம் சிறப்பான கலெக்ஷனை பெற்று வரும் நிலையில் வாரயிறுதி நாட்களான இன்றும் நாளையும் மேலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக முன்னதாக மிகப்பெரிய அளவில் பிரமோஷன்களில் பிரஷாந்த் ஈடுபட்ட நிலையில் அவரது உழைப்பு வீண் போகவில்லை. படம் மிகப் பெரிய கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், தற்போது சினிமா விமர்சகரும் இயக்குனருமான ப்ளூ சட்டை மாறனும் இந்த படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Prashanth is Back: தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இதுகுறித்து புதிய பதிவை ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ளார். மக்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது அந்தகன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வசூல் ரீதியிலான வெற்றியை எந்தளவிற்கு பெறும் என்பது சில தினங்களில் தெரியும் என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்தியன் 2, ராயன் போன்ற படங்களை விட அந்தகன் படம் எவ்வளவோ மேல் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பிரஷாந்த் ஈஸ் பேக் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரசாந்த், சிம்ரன், இயக்குநர் தியாகராஜன் இருக்கும்படியான புகைப்படத்தையும் தன்னுடைய பதிவில் அவர் இணைத்துள்ளார்.

வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்: தொடர்ந்து அடுத்தடுத்த நடிகர்கள் மற்றும் அவர்களின் படங்கள் குறித்த விமர்சனங்களை நெகட்டிவாக கொடுத்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இதன் மூலம் பல்வேறு தரப்பினரின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் பிரஷாந்த்திற்கு ஆதரவாக அவரை பாராட்டி உள்ளது அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. பிரஷாந்த் இந்தப் படத்தின் மூலம் தன்னுடைய ரீ-என்ட்ரியை சிறப்பாக்கி உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள ப்ளூ சட்டை மாறன், கமல்ஹாசன், தனுஷை வம்பிழுக்கவும் தவறவில்லை.


Click it and Unblock the Notifications











