ஐஸ்வர்யா ராய் விவாகரத்து முடிவு.. காரணம் இவர்தானா.. பத்திரிகையாளர் சபீதா ஜோசப் சொன்ன விஷயம்!

சென்னை: ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய், மும்பையில் தனியாக வசித்து வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த அம்பானி குடும்ப திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளுடன் பங்கேற்ற நிலையில் அபிஷேக் பச்சன் தன்னுடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் தனித்தனியாக கலந்து கொண்டதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் இந்த விவாகரத்து முடிவு குறித்து தற்போது பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

Aiswarya rai Abhishek bachan Sabitha joseph

நடிகை ஐஸ்வர்யா ராய்: நடிகை ஐஸ்வர்யா ராய் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அடுத்தடுத்த மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ராய், சமீபத்தில் அவரது இயக்கத்திலேயே பொன்னியின் செல்வன் மற்றும் அதன் இரண்டாவது பாகத்திலும் நடித்திருந்தார். முன்னதாக பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கியவர் ஐஸ்வர்யா ராய். பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் இவர் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியதாகவும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் சில மனக்கசப்புகள் காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர்.

ஐஸ்வர்யா ராய் காதல் சர்ச்சைகள்: இதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் விவேக் ஓபராய் காதலிப்பதாக அடுத்த சர்ச்சையிலும் சிக்கினார் ஐஸ்வர்யா ராய். இந்த உறவிலிருந்தும் பல்வேறு காரணங்களால் ஐஸ்வர்யா ராய் வெளியேறிய நிலையில், அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதன்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் கடந்த 2007ம் ஆண்டில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் பிறந்த நிலையில் தொடர்ந்து நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், இந்த நேரத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் நடித்த நிலையில் அவருடன் இணைந்து லிப்லாக் காட்சியில் நடித்ததாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

லிப் லாக்கில் ஐஸ்வர்யா ராய்: திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பின்பு முத்தக்காட்சியில் காட்சியில் மற்றொரு நடிகருடன் ஐஸ்வர்யா ராய் நடித்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளையும் அவரது குடும்பத்தில் புயலையும் ஏற்படுத்தியதாக தற்போது பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தனது பேட்டியில் கூறியுள்ளார். அப்போதிருந்தே சில மனக்கசப்புகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனிடம் துவங்கியதாக கூறியுள்ள சபிதா ஜோசப், இதனிடையே ஜெயா பச்சனுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகை ரேகாவிடம் ஐஸ்வர்யா ராய் கொண்டிருந்த நட்பும் இவர்களது பிரச்சினைகளுக்க காரணங்களாக அமைந்ததாகவும் கூறியுள்ளார்.

இவர்தான் காரணமா?: நடிகை ரேகா மற்றும் அமிதாப் பச்சன் காதல் விவகாரத்தால் ரேகா மற்றும் ஜெயா பச்சனிடையே நீண்ட காலங்களாக சண்டை இருந்துவரும் நிலையில் ரேகாவுடனான ஐஸ்வர்யா ராயின் நட்பும் குடும்பத்தில் அடுத்தடுத்த விரிசல்களை ஏற்படுத்தியதாக சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அம்பானி இல்ல திருமணத்தில் தனித்தனியாக ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் கலந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னுடைய முன்னாள் காதலர் சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

பிரிய வாய்ப்புகள் குறைவுதான்: ஆனால் இந்த தகவலை ஐஸ்வர்யாராய் மறுத்ததுடன் தன்னுடைய கோபத்தையும் வெளிப்படுத்தினார், ஆயினும் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் பிரிவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார் அவர்கள் இருவரும் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் குடும்பத்தினர் ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக்கின் பிரிவை விரும்ப மாடடார்கள், அவர்கள் இணைந்து வாழும்படி பேசி முடிவெடுப்பார்கள் என்றே தான் கருதுவதாக சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X