தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல்...மீண்டும் தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

சென்னை : தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று டைரக்டர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் தலைவராகி உள்ளார். அவருக்கு திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த ஜனவரி மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரானாவால் தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்பட்டு பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Cinema Directors union election...R.K.Selvamani to be President again

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் சென்னையில் இன்று(பிப்ரவரி 27) நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 2600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுபோடும் உறுப்பினர்களாக 1900பேர் உள்ளனர்.

இன்று நடந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் 100 சேர்த்து 1520 ஓட்டுகள் பதிவாகின. செந்தில்நாதன் தலைமையில் நடந்த இந்த தேர்தல் தகுந்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது. காலையில் துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. ஓட்டு எண்ணிக்கை இன்று மாலையே நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ஆர்.கே.செல்வமணி 389 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X