twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து!

    சென்னையில் சினிமா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    |

    Recommended Video

    அரசு மற்றும் திரைத்துறை நிகழ்ச்சிகள் அனைத்தும் நாளை ரத்து

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    திமுக தலைவரும், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Cinema events cancelled due to Kalaignar health condition!

    இந்த நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு காவேரி மருத்துவமனையின் ஏழாவது அறிக்கை வெளியானது. அதில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும், நிலையற்றதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும், இன்று திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனையும் சந்தித்துள்ளார்.

    இந்த செய்திகளின் அடிப்படையில், மு.கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இன்று நடக்கவிருந்த சினிமாவின் முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை சென்னையில் நடைபெற இருந்த பாடலாசிரியர் பா.விஜய் தயாரித்து இயக்கி நடித்துள்ள ஆருத்ரா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் ஆகஸ்ட் 9ஆம் தேதி இயக்குனர் பாரதிராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் ஓம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்றும் சில சினிமா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    வரும் வெள்ளிக்கிழமை கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. கலைஞரின் குடும்பத்திற்கு மிக நெருக்கமான நடிகராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். தன்னுடய மக்கள் நீதி மய்யம் ஆரம்பிப்பதற்கு முன் கலைஞரிடம் ஆசிபெற்றார். அதனால், விஸ்வரூபம் 2 திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுமா அல்லது கருணாநிதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ரிலீஸ் தள்ளிப்போடப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Cinema events have been cancelled due to DMK Leader M.Karunanidhi's health condition.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X