For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மணிரத்னம் சினிமா வாழ்க்கையில் கணபதி ஒரு தனி அத்தியாயம் - அழகம் பெருமாள்

|
Vairamuthu about Ponniyin Selvan Movie

சென்னை: சினிமாவில் பல வெற்றியை கொடுத்த மாபெரும் மனிதர்களின் பின்னால் கணபதி போன்ற உழைப்பாளிகள் இருக்க தான் செய்கிறார்கள். ஊடகம் எப்பொழுதும் திரைக்கு முன்னாள் இருக்கும் மனிதர்களை காட்டி விட்டு லட்சியவாதிகளை பதிவு செய்ய மறந்து விடுகிறது என்று இயக்குநரும் நடிகருமான அழகம் பெருமாள் கூறியுள்ளார். மணிரத்னம் சினிமா வாழ்க்கையில் புரடெக்சன் மேனேஜர் கணபதி ஒரு தனி அத்தியாயம் என்றும் தெரிவித்துள்ளார்

தளபதியில் துவங்கி மணிசாரின் பல படங்களில் தயாரிப்புத் துறையில் பணி புரிந்தவர் கணபதி. நான் உதவி இயக்குநராக இருந்த காலம் முதல் என்னோடு ஒரு நல்ல நெருங்கிய நண்பனாக இருந்தவர். பதினாறு நாட்களுக்கு முன்பு பக்கவாதம் (massive stroke) வந்து அப்படியே வீழ்ந்தவர் தான் கோமாவிலேயே படுத்த படுக்கையாக கிடந்து உயிரிழந்து விட்டார்.

Cinema forgetting to record the ambitious mans-Azhagam Perumal

இது குறித்து முகநூல் பக்கத்தில் அழகம் பெருமாள் எழுதியுள்ளார். அவரது சோகமயமான பதிவு:

நேற்று தான் எனக்கு தகவல் தந்தார்கள். உடன் சென்று பார்த்தேன். மருத்துவமனையிலிருந்து வீடு வந்தது முதல் இந்நேரம் வரை முகநூலில் (நேரில் முகம் காணா) நண்பர்களோடு எதை எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன்.

Cinema forgetting to record the ambitious mans-Azhagam Perumal

எனக்கே தெரிகிறது. நான் நீண்ட நேரமாக இங்கே இருக்கிறேன் என் துயரை மறக்கத்தான். ஐசியு (ICU)ல் இருந்த அவரிடம் என்னை அழைத்துச் சென்ற அவரது மகன். தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் வழக்கமாக நிலவும் மயான அமைதியைக் குலைத்து கத்திச்சொல்கிறான்.

சத்தமில்லாமல் கொளுத்திப்போட்ட சாண்டி.. பற்றி எரியும் பிக் பாஸ் வீடு.. ருத்ரதாண்டவமாடும் வனிதா..!

அப்பா கண்ண தொற... பெருமாள் சார் வந்திருக்காரு... அழகம்பெருமாள், பொன்னியின் செல்வன்ல நீ வொர்க் பண்ணனுமாம், உன்ன கூட்டிட்டு போக வந்திருக்காரு.

சினிமாவில் பல வெற்றியை கொடுத்த மாபெரும் மனிதர்கள் பின்னால் மிகப் பெரிய உழைப்பாளிகள் இருக்க தான் செய்கிறார்கள். ஊடகம் எப்பொழுதும் திரைக்கு முன்னாள் இருக்கும் மனிதர்களை காட்டி விடுகிறது. ஆனால் இப்படிப்பட்ட சினிமா, லட்சியவாதிகளை பதிவு செய்ய மறந்து விடுகிறது.

ஒரு திறமையான புரொடக்சன் மேனேஜர் மீண்டு வரவேண்டும். இந்த விநாயகர் சதுர்த்தி, கணபதியை காப்பாற்ற வேண்டும்.

இப்படிக்கு - அழகம் பெருமாள்

(இயக்குனர் / நடிகர்) கணபதி போன்ற சினிமா காதலர்களின் நண்பன்.

இந்தப் பதிவை பலர் பார்த்து பிராத்தனை செய்து கொண்டார்கள். ஆனால் கடவுள் கணபதியை அவரிடமே எடுத்து கொண்டார். மணி சார் படங்களில் வேலை செய்த பல நடிகர்கள், இவர் உழைப்பையும், இழப்பையும் நன்கு அறிவார்கள். மணி சார் சினிமா வாழ்க்கையில் கணபதி ஒரு தனி அத்தியாயம்.

நம்பர் 8, ராமகிருஷ்ணபுரம் 2ஆவது தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33 என்பது அவரது வீட்டு முகவரி. ஆனால் அவர் இந்த நாளில் அங்கு இல்லை. விநாயகர் சதுர்த்தி அன்று சென்றதால் இனி கடவுள் பார்த்து கொள்வார் அந்த குடும்பத்தை, என்று இல்லாமல் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சினிமா பிரபலங்கள் கணபதி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்றும் அழகம் பெருமாள் கூறியுள்ளார்.

Read more about: actor director
English summary
Behind the successes of the biggest men in cinema, there is the hard work of Ganpati, said Azhagam Perumal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more