ஓடும் ஆட்டோவில் சிறுமிக்கு தொல்லை..கானா பாடகர் கைது!

சென்னை : ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சினிமா கானா பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Cinema Ghana singer Jagan arrested

ஆண்டிற்கு ஒரு முறை பெண்களை நினைத்துப் பார்க்கவும், அவர்களைப் போற்றிப் பாதுகாக்கவும், பெண்கள் தினத்தை உருவாக்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வன்மங்களும் குறைந்து விட்டதா என்றால் இல்லை என்பதே பதில். காலம் மாறிவிட்டது நாகரிகம் வளர்ச்சி பெற்று விட்டது என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தில் தான் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய செய்தி.

மங்கையராகப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்றார் கவிமணி. அந்தளவிற்கு பெண்மை போற்றப்பட்டாள், பாதுகாக்கப்பட்டாள். இந்த உலகத்தின் ஆணிவேராக அடையாளம் காட்டப்பட்டாள். ஆனால் தற்போதைய நிகழ்வுகள் பெண்மையின் மீதான பாதுகாப்பையும், பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையையும் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். எது சுதந்திரம்? அந்நியரிடம் இருந்து நாட்டைத்தான் மீட்டிருக்கிறோம். ஆனால் ஆணாதிக்கத்தில் இருந்து பெண்களை மீட்டு விட்டோமா என்றால், இல்லை என்பதற்கு ஓராயிரம் வன்மங்கள் சாட்சியாக இருக்கிறது.

இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார். அப்போது அதே ஆட்டோவில் பயணம் செய்த 2 வாலிபர்கள் திடீரென மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். இதில் காயம் அடைந்த மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கானா பாடகர்களான வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெகன் என்கிற டோலாக் ஜெகன், கொருக்குப்பேட்டையை சேர்ந்த மணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் ஜெகன் சினிமாவில் பாடல் பாடி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X