twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருந்தாத ஜென்மங்கள்.. சத்தமின்றி கேன்டீனில் ஸ்னாக்ஸ் விலையை உயர்த்திய தியேட்டர்கள்!

    By Shankar
    |

    சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளின் கேன்டீன்களில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக மால்களில் பாப்கார்ன் விலையை 250 வரை உயர்த்தியுள்ளனர்.

    தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 25 சதவீதம் வரை டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதித்தது.

    Cinema Halls silently hikes snacks prices

    இதனைத் தொடர்ந்து அதிகபட்சம் ரூ 222 வரை தியேட்டர்களில், மால்களில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. கிட்டத்தட்ட 100 சதவீத உயர்வு இது. அதேபோல தீபாவளிக்கு ரிலீசான விஜய்யின் மெர்சல் படத்துக்கு 500 முதல் 1000 வரை டிக்கெட் விற்கப்பட்டது. எதையும் அரசு கண்டுகொள்ளவே இல்லை.

    இந்த நிலையில் சத்தமில்லாமல் தியேட்டர்களில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலையையும் உயர்த்தியுள்ளனர்.

    மால்களில் பெரிய சைஸ் பாப்கார்ன் விலை ரூ 250க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன் 210க்கு விற்கப்பட்ட பாப்கார்ன் இது. ரெகுலர் பாப்கார்ன் விலை ரூ 150க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன் 120-க்கு விற்றார்கள்.

    குளிர்பானங்கள் விலை ஆரம்பமே ரூ 140 ஆக்கிவிட்டார்கள். இதற்கு முன் 90க்கு விற்று வந்தார்கள்.

    ஒற்றைத் திரை அரங்குகளிலும் கிட்டத்தட்ட இதே ரேஞ்சுக்கு அனைத்துப் பொருள்களின் விலையையும் உயர்த்தியுள்ளனர்.

    தியேட்டர்களில் எம்ஆர்பி எனப்படும் அதிகபட்ச சில்லறை விலை என எந்தப் பொருளிலும் குறிப்பிடுவதில்லை. சமோசா தொடங்கி பாப்கார்ன் வரை எல்லாமே அவர்களின் தயாரிப்புதான். எம்ஆர்பி குறிப்பிடப்பட்டுள்ள பாட்டில் பானங்கள், குடிநீரை 100 சதவீதம் விலை உயர்த்தியே இப்போதும் விற்கிறார்கள். அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை.

    இனி பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறியிருந்தார். ஆனால் பல தியேட்டர்கள் மேலும் 10 ரூபாயை உயர்த்தியுள்ளன.

    English summary
    Most of the Cinema Halls have raised the snacks and parking charges silently.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X