twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னுடன் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை.. இயக்குநர் பா ரஞ்சித் பரபர!

    |

    சென்னை: தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை என பிரபல இயக்குநரான பா ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

    Recommended Video

    என் படத்துல நடிச்சவங்களுக்கு வெளிய வாய்ப்பு இல்லை | Pa.Ranjith Writer Movie Pressmeet

    தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராக வலம் வருபவர் பா ரஞ்சித். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    அமீர் மட்டும் தான் கொடுப்பாரா...நாங்களும் கொடுப்போம்...முத்த சர்ச்சையில் சிக்கிய அக்ஷரா அமீர் மட்டும் தான் கொடுப்பாரா...நாங்களும் கொடுப்போம்...முத்த சர்ச்சையில் சிக்கிய அக்ஷரா

    கடைசியாக சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கியிருந்தார் பா ரஞ்சித். ஆர்யா நடிப்பில் குத்துச்சண்டையை மைய்யப்படுத்தி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    ரைட்டர் தயாரிப்பு

    ரைட்டர் தயாரிப்பு

    தற்போது இயக்குநர் பா ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அதேநேரத்தில் புரெடியூஸராகவும் வலம் வரும் இயக்குநர் பா ரஞ்சித் ரைட்டர் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

    சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரம்

    சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரம்

    இந்தப் படத்தை பா ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியானது. இதன் மூலம் ரைட்டர் படம் காவல் நிலைய கதையை மைய்யப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

    வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை

    வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை

    இந்நிலையில் இப்படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் பா ரஞ்சித் சினிமாத்துறையில் சாதிய பாகுபாடு இருப்பதாக மறைமுகமாக குற்றம்சாட்டினார். பிரஸ் மீட்டில் அவர் பேசியதாவது, என்னுடன் பணியாற்றியவர்களுக்கு சினிமாத் துறையில் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.

    ஹரிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை

    ஹரிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை

    இதனால் நடிகர்கள் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 'மெட்ராஸ்' படத்தில் ஜானியாக நடித்த ஹரிக்கு அந்தப் படத்துக்குப் பிறகு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். எனது ஸ்கிரிப்ட்டின் அடிப்படையில் நடிகர்களைத் தேர்வு செய்கிறேன், அவர்கள் நன்றாக வேலை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    சாதி பாகுபாடு இருக்கிறது..

    சாதி பாகுபாடு இருக்கிறது..

    மேலும் 'ரைட்டர்' படத்தில் ஹரியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், ஆனால் படத்தின் இயக்குனர் கூறும் வரை அது தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார் . ஃபிராங்க்ளின் இதைப் பற்றி தனக்கு தாமதமாகதான் கூறினார் என்றும் தெரிவித்தார். திரையுலகில் ஜாதி பாகுபாடு இருப்பதாக மறைமுகமாக ரஞ்சித் கூறியதாக தெரிகிறது.

    இணைந்து பணியாற்ற முடியாது

    இணைந்து பணியாற்ற முடியாது

    மேலும் தனது அரசியல் கருத்தைப் புரிந்து கொள்ளாத கலைஞர்களுடன் தன்னால் இணைந்து பணியாற்ற முடியாது என்றும் இயக்குநர் ரஞ்சித் கூறினார். ரைட்டர் திரைப்படம் 24ஆம் தேதியான நாளை மறுநாள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Pa Ranjith says Cinema industry denies offers to actors who worked with him. Pa Rajith indirectly says caste discrimination is there in the film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X