For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சினிமாவை காப்பாற்ற அரசும், கதாநாயகர்களும் முன்வரவேண்டும் - ஆர்.வி.உதயகுமார்

  |

  சென்னை: சினிமா என்பது வெறும் திரைப்படம் மட்டுமே கிடையாது. அது ஒரு குடும்பம் என்று தண்டகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். சிறிய பட்ஜெட் படங்களைக் காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என்றும் ஆர்.வி உதயகுமார் கூறியுள்ளார்.

  பழம்பெரும் இந்திய இதிகாச காவியங்களில் ஒன்றான ராமாயணத்தில் உள்ள மொத்த கதாபாத்திரங்களின் எண்ணிக்கை 4638 தான். இன்றைக்கு உள்ள மக்கள் தொகையில் இந்த 4638 கதாபாத்திரங்களில் யாராவது ஒருவருடைய கதாபாத்திரமாகத்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ராமாயணத்தை முழுவதும் படித்துப் பார்த்தால், நாம் அதில் எந்தவிதமான கதாபாத்திரம் என்பது நமக்கு புரிந்துவிடும்.

  Cinema is not a film it’s a family-R.V.Udayakumar

  ராமாயணத்தில் உள்ள 4638 கதாபாத்திரங்களில் ஒருவர் தான் தண்டகன். தற்போது தயாராகி இருக்கும் புதுப்படத்திற்கு தண்டகன் என்று பெயர் வைத்துள்ளனர். இவரின் குணாதிசயம் எப்படி இருக்கும். அவனுடைய மன இயல்பு எப்படிப்பட்டது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருப்பது தான் தண்டகன். இப்படத்தை அறிமுக இயக்குநர் கே.மகேந்திரன் இயக்கியுள்ளார்.

  இப்படத்தில் கதாநாயகனாக அபிஷேக் வினோத் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ஸ்கெட்ஸ், பாபநாசம், ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். கதாநாயகிகளாக மனோசித்ரா, அஞ்சு கிருஷ்ணா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். ராட்சசன் படத்தில் வில்லனாக வந்து மிரட்டிய நான் சரவணன், எஸ்.பி.கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, ஆதவ், ராம், வீரா, தீபா, எலிசபெத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  Cinema is not a film it’s a family-R.V.Udayakumar

  இப்படத்தை ஒளிப்பதிவு செய்திருப்பது தளபதி ரத்னம். இசையமைத்திருப்பது ஷ்யாம் மோகன், படத்தொகுப்பு வசந்த் நாகராஜ், சண்டைப் பயிற்சி பில்லா ஜெகன், நடனம்-ஸ்ரீசெல்வி, மக்கள் தொடர்பு-சக்தி சரவணன். பாடல்கள் எழுதியது மோகன்ராஜ் மற்றும் இயக்குநர் கே.மகேந்திரன். ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி.இளங்கோவன் தண்டகன் படத்தை தயாரித்துள்ளார்.

  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம், பெரிய பட்ஜெட் படங்களோடு போட்டி போட முடியாமல் சிறிய பட்ஜெட் படங்கள் திண்டாடுகின்றன. எனவே, தமிழக அரசே தமிழ்நாடு முழுவதும் 100 தியேட்டர்களை கட்டி, அதில் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியிட உதவி செய்யவேண்டும் என்று பேசினார்.

  இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது, சினிமா ஆளுமை உள்ள மாநிலமான தமிழ்நாட்டில் சினிமா அழிந்துவிடக்கூடாது. இதற்காக தமிழக அரசு உதவி செய்யவேண்டும். அதோடு, அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகர்கள் ஒன்றுபட்டு தமிழ் சினிமாவை காப்பாற்ற முன்வரவேண்டும்.

  தமிழ் சினிமா என்பது வெறும் திரைப்படம் மட்டும் கிடையாது. இது ஒரு குடும்பமாக உள்ளது. அதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். இந்தப்படத்தின் இயக்குநரை எல்லோருமே அப்பா என்று அன்புடன் அழைக்கின்றனர். இதைப்பார்க்க எனக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.

  இதே போல் தான் நான் அறிமுகப்படுத்திய நடிகை சவுந்தர்யாவும். அவரும் என்னை அண்ணா என்று தான் அன்போடு அழைப்பார். அவருடைய வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு கூட என்னை அழைத்து தான் தீர்த்து வைத்தார். அவர் திருமணம் செய்வதற்கும் என்னிடம் உதவி கேட்டார். அவர் கட்டிய புதுவீட்டு கிரகப்பிரவேசத்திற்கு என்னை அழைத்தார்.

  ஆனால் நான் அப்போது இருந்த பிசியில் என்னால் போகமுடியவில்லை. ஆனால் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணம் அடைந்ததைக் கேள்விப்பட்டு உடனடியாக அவர் வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் வீட்டின் வரவேற்பறையில் வேறு எந்த படமும் இல்லை. என்னுடைய படம் மட்டுமே மாட்டப்பட்டிருந்தது.

  அதைப் பார்த்தவுடன் என்னால் துக்கத்தை தாங்க முடியவில்லை. அப்பொழுது தான் தெரிந்தது அவர் ஏன் என்னை அண்ணா என்று அழைத்தார் என்பது. அதைப் பார்த்த உடன் என்னால் துக்கத்தை அடக்க முடியவில்லை என்று பேசியபோது அவருடைய கண்கள் கலங்கியது பார்வையாளர்களை நெகிழச்செய்தது.

  English summary
  Cinema is not just a movie, it is family, Director RV Udayakumar spoke at the music launch of the film Thandagan.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X