Exclusive: சிவாஜி, கமல், விஜய் சேதுபதி வரிசையில் நானும் இடம்பிடிக்க வேண்டும்.. 'ஜீனியஸ்’ ரோஷனின் ஆசை

சுசீந்திரனின் ஜீனியஸ் படம் வரும் 26ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

சென்னை: சுசீந்திரனின் ஜீனியஸ் படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் ரோஷன்.

"எனக்கு சின்ன வயசுல இருந்தே நடிகனாகனும்னு ஆசை தான். ஆனா அப்போ அது முடியல. பிறகு தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக செய்து வருகிறேன். ஆனா நடிப்பு ஆசை உள்ளுக்குள்ள இருந்துட்டே இருந்தது. எவ்வளவோ முயற்சித்தும் வாய்ப்பு கிடைக்கல. அதனால பிசினஸுக்கு போக வேண்டிய கட்டாயம்.

பிசினஸ் ஓரளவுக்கு செட்டானதும், எனது பார்ட்னர்கள் கையில அதை கொடுத்துட்டு திரும்பவும் நடிக்க வந்துட்டேன்".... சுசீந்திரன் இயக்கத்தில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் ஜீனியஸ் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் ரோஷனின் வார்த்தைகள் தான் இது.

தடுமாற்றமே இல்லாமல், சினிமாவுக்குள் தான் வந்த கதையை விவரிக்கிறார் ரோஷன்.

முதல் படமே சுசீந்திரன் இயக்கத்தில்... எப்படி ஆரம்பமானது ஜீனியஸ்...

ஜீனியஸ் வாய்ப்பு:

ஜீனியஸ் வாய்ப்பு:

மீண்டும் சினிமாவுக்கு வரணும்னு முடிவு செஞ்சப்புறம், நானே தயாரிக்கவும் செய்யணும்னு நினைத்தேன். ஏன்னா நமக்கு யாரு கூப்பிட்டு வாய்ப்பு கொடுப்பா. நிறைய இயக்குனர்கள் வந்தாங்க. இரண்டு படங்கள் தயாரித்து நடிச்சேன். ஆனா அதுல திருப்தி இல்ல.

கதை பிடித்தது:

கதை பிடித்தது:

பிறகு தான் ஒரு நண்பர் மூலமாக சுசீந்திரன் சாரை பார்த்தேன். அவர் சொன்ன ஜீனியஸ் கதை எனக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உடனே ஷூட்டிங் கிளம்பிட்டோம். இதோ இப்போ படம் ரிலீசுக்கு தயார். எல்லோரும் ஆவலா காத்திட்டிருக்கோம்.

மனைவி தான் காரணம்:

மனைவி தான் காரணம்:

படத்துல நடிக்கப் போறேன்னு சொன்னதும் வீட்ல என்ன ரியாக்ஷன்.... என்ன நடிக்க அனுப்பி வெச்சதே என் மனைவி தான். அந்தளவுக்கு எங்ககுள்ள அன்கண்டிஷனல் லவ். ஒருவரை ஒருவர் நல்லா புரிஞ்சு வெச்சிருக்குறதனால நான் ரொமான்ஸ் சீன்ல நடிச்சாலும் அவங்க தப்பா நினைக்க மாட்டாங்க. ஏன்னா இது ஒரு தொழில்னு அவங்களுக்கு தெரியும்.

உறவுகள் முக்கியம்:

உறவுகள் முக்கியம்:

நான் பொதுவாகவே மனிதர்களை நேசிக்கிறவன். என்னை சுற்றி எப்போதுமே நண்பர்கள் கூட்டம் இருந்துட்டே இருக்கும். உறவுகள் தான் முக்கியம்னு நினைக்கிறவன். அதனால சினிமாவில் நடிப்பதால் என்னை யாரும் தவறாக நினைக்க மாட்டாங்க.

அனுபவம்:

அனுபவம்:

இயக்குனர் சுசீந்திரனுடன் வேலை பார்த்த அனுபவம்... ஏற்கனவே இரண்டு இயக்குனர்கள் கூட வேலை பார்த்தேன். ஆனா தரம் என்றால் என்ன என்பதை சுசீந்திரனிடம் தான் பார்த்தேன். இந்த படம் ஒரு ஐ.டி.ஊழியரை பற்றியது. ரொம்ப அருமையாக எடுத்திருக்கிறார். நிறைய கத்துக்க முடிஞ்சுது.

பிடிவாதம்:

பிடிவாதம்:

தயாரிப்பாளர்கள் படும் கஷ்டத்தை தெரிஞ்சிட்டு தான் சினிமாவுக்கு வந்தீங்களா... சினிமா தயாரிப்பு வேண்டாம் என்று நிறைய நண்பர்கள் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள். ஆனால் நான் பிடிவாதமாக நின்றேன். சினிமா என்பது வியாபாரம் அல்ல. இது ஒரு கலை. எனவே ஒரு கோடி போட்டா பத்து கோடி வரும்னு கணக்கு போட்டு சினிமா எடுக்கக் கூடாது.

நம்பிக்கை:

நம்பிக்கை:

நல்ல படத்துக்கு மக்கள் எப்போதுமே ஆதரவு தருவாங்க. மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் படங்கள் எல்லாம் பல கஷ்டங்களை தாண்டி இன்னும் ஓடலையா. நம்ம படம் நல்லா இருந்தா நிச்சயம் மக்கள் ஆதரவு கிடைக்கும்.

வரவேற்பு:

வரவேற்பு:

புதுமுக நடிகரான உங்களுக்கு ஓப்பனிங் எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க...
எனக்கு ஓப்பனிங் இல்லைனாலும், சுசீந்திரன் படத்துக்கான ஓப்பனிங் நிச்சயம் இருக்கும். டீசர் பார்த்த பிறகு உலகளவில் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. தமிழ்நாட்டு 150 தியேட்டர்களுக்கு மேல் கிடைச்சிருக்கு. ஆனா நாங்க தான் நல்லதா 100 தியேட்டர்ல திரையிட்டா போதும்னு நினைக்கிறோம்.

என் ஆசை:

என் ஆசை:

தொடர்ந்து நடிப்பீங்களா இல்ல மீண்டும் பிசினஸ் பண்ண போய்டுவீங்களா....
நிச்சயமா தொடர்ந்து நடிப்பேன். சிவாஜி, கமல், விக்ரம், விஜய் சேதுபதி வரிசையில் நானும் இடம்பிடிக்க வேண்டும் என்பது என் லட்சியம். அதற்காக அர்ப்பணிப்போடு உழைக்கிறேன். நிச்சயம் அந்த நாள் வரும்னு எதிர்பார்க்கிறேன். நான் இப்படி பேசுறத கேட்டா என் நண்பர்கள் நிச்சயம் கலாய்ப்பாங்க. ஆனாலும் என் ஆசை இது தான்" நம்பிக்கையுடன் விடைபெறுகிறார் ஜீனியஸ் ரோஷன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X