மகிழ் திருமேனியிடம் வசமா மாட்டிக்கொண்ட அஜித்.. விடாமுயற்சி படம் எப்படி இருக்குமோ.. அந்தணன் பேட்டி!

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இதில்,திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பலர் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 3 ஆண்டுகளான நடைபெற்று வரும் நிலையில், படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என்கின்றனர்.

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்திற்கு பிறகு எந்த படமும் வெளியாகாததால்,அஜித் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.இதுகுறித்து பேட்டி அளித்துள்ள சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், இயக்குநர் மகிழ் திருமேனி வழக்கமாக ரொம்ப ஸ்லோவாகத்தான் எதையும் செய்வார். இந்த விஷயம் தெரியாமல் போய் மாட்டிக்கொண்டது லைகா, இந்த விஷயம் அஜித்திற்கு கூட தெரியாது.

ajith vidamuyarchi anthanan

இதற்குத்தான் சினிமா பற்றி விஷயத்தை தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அப்படி அஜித்திற்கு தெரிந்து இருந்தால் நிச்சயம் அவர், மகிழ் திருமேனியை வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பார். இப்படி அஜித் தெரியாமல் போய் தான் மகிழ் திருமேனியிடம் வசமா மாட்டிக்கொண்டார்.

விடாமுயற்சி: இப்போது சினிமாவில் நிறைய போட்டி வந்துள்ளது, இந்த காலகட்டத்தில், குறுகிய காலத்தில் அடுத்தடுத்து படத்தை கொடுக்க வேண்டும். அது தான் ஹீரோவையும் வாழ வைக்கும், தயாரிப்பாளரையும் வாழ வைக்கும். அதைவிட்டு விட்டு ஒரு படத்திற்கு மூன்று ஆண்டு எடுத்துக்கொண்டால், பின் உள்ளவன் முந்திக்கொண்டு ஓடிவிடுவான். இதையெல்லாம் அஜித் புரிந்து கொண்டு இயக்குநரை மாற்றி இருக்க வேண்டும்.

படம் எப்படி இருக்கு: இப்பவும் விடாமுயற்சி படத்திற்கு பல சிக்கல் இருக்கு இந்த தேதிக்குள் படம் வெளியாகவில்லை என்றால் பல பிரச்சனை இருக்கு என்று மகிழ் திருமேனியிடம் லைக்கா சொன்ன பிறகும், இன்னும் செதுக்கிக் கொண்டே இருக்கிறார். ஆனால், விடாமுயற்சி படம் சூப்பராக வந்து இருக்காம், படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் அஜித் ரசிகர்கள் படம் எப்போது வரும் என்று டென்ஷன் ஆகிறார்கள். ஆனால், மகிழ் திருமேனி, ஒரு பெரிய நடிகருடன் இணையும் வாய்ப்பு வந்து இருக்கு, இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார் என்று அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X