அடுத்த விஜய் யார்? கன்னை கொடுத்தது என்ட்ரி டோக்கன்.. SK செய்த புண்ணியம்.. பிரபலம் பளீச்!

சென்னை: விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், அவர் சினிமாவில் இருந்து விலக உள்ளதால், சினிமாவில் காலியாகும் விஜய்யின் இடத்திற்கு யார் வருவார் என்கிற பேச்சு பரவலாக பேசப்பட்ட நிலையில், கோட் படத்தில் விஜய், சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியை கொடுத்து பார்த்துக்கொள்ள சொல்லுவார். இதைவைத்து, சிவகார்த்திகேயன் தான் அடுத்து விஜய் என பேச்சு பரவலாக பரவி வருகிறது. இது குறித்து சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் பேட்டி அளித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ந் தேதி வெளியானத் திரைப்படம் கோட். பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தி வரும் இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு விதமான ரோலில் மிரட்டி இருந்தார். இப்படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

vijay sivakarthikeyan anthanan

அடுத்த விஜய் யார்: அப்போது, விஜய், சிவகார்த்திகேயனை பார்த்து துப்பாக்கியை புடிங்க என்று சொல்லுவார். அதற்கு சிவகார்த்திகேயன் நீங்கள் இத விட முக்கியமான வேலையா போறீங்க நான் இத பார்த்துக்கிறேன் என பதில் அளித்து இருப்பார். ஏற்கனவே அடுத்த விஜய் இடம் யாருக்கு என பேசப்பட்டு வரும் நிலையில், இந்த வசனத்தின் மூலம், நடிகர் விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் அந்த இடத்தை நிரப்பப் போகிறார் என ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

துப்பாக்கி கணமாத்தான் இருக்கு: அதுமட்டுமில்லாமல், அமரன் படத்தின் அறிமுக விழாவில் தொகுப்பாளினி சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கி கணம் எப்படி இருக்கு என்று கேட்க, அதற்கு சிவகார்த்திகேயன் துப்பாக்கி கணமாத்தான் இருக்கும் நாம்தான் சரியா ஹேண்டில் பண்ண வேண்டும் என்று பதில் அளித்து இருந்தார். இதுகுறித்து, பேசிய சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், இது மிகவும் சென்சிடிவ்வான விஷயம் தான், ஏன் என்றால், விஜய்யுடன் அறிமுகமான அஜித், சிம்பு, தனுஷ் என பல நடிகர்கள் இருக்கிறார்கள். இப்படி பல நடிகர்கள் இருக்கும் போது, சம்மந்தமே இல்லாமல் ஒருவரிடம் ஒரு வசனத்தை பேசி துப்பாக்கியை கொடுக்கும் போது யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

சிவகார்த்திகேயன் செய்த புண்ணியம்: இதை படத்திற்காக சும்மா வைத்து இருக்க வாய்ப்பு இல்லை, இதற்கு பின் ஏதோ ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். எனக்கு பிறகு நீ தான் என்று விஜய் மறைமுகமாக சொல்லி இருக்கலாம். அதுமட்டுமில்லாமல், விஜய்க்கு குழந்தைகள், பெண்கள் என தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதே போல சிவகார்த்திகேயனுக்கும் குழந்தைகள், பெண் ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஆனால், தனுஷுக்கும் சிம்புவிற்கும் அப்படி இல்லை. அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய இடத்தை விஜய், சிவகார்த்திகேயனிடம் கொடுப்பது என்பது அவர் செய்த புண்ணியம் தான்.

என்ட்ரி டோக்கன்: விஜய் சொல்லிவிட்டதால், அந்த இடம் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துவிடுமா என்றால், அதற்கு அவர் கடுமையாக உழைக்க வேண்டும். இதைவிட அவர் வேகமாக ஓட வேண்டும், உழைக்க வேண்டும் இன்னும் நிறைய பல வெற்றிப்படத்தை கொடுத்தால் தான் அவர், விஜய் இடத்திற்கே வரமுடியும். இது சும்மா ஒரு என்ட்ரி டோக்கன், இதன் பிறகு சிவகார்த்திகேயன் ஓட வேண்டும் என்று அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X