அந்த காமெடி நடிகருக்கு பாடி டிமாண்ட் அதிகம்.. அந்த நடிகையை தொட்டதால் என் மேல கோபம்.. புலம்பிய பிரபலம்!

சென்னை: மூத்த பத்திரிக்கையாளரும், குணச்சித்திர நடிகருமான பயில்வான் ரங்கநாதன், தனக்கு இருக்கும் சினிமா அனுபவத்தை வைத்துக்கொண்டு நடிகர் நடிகர்களின் பல விஷயங்கள் குறித்து பேசுகிறார். அந்த வகையில் காமெடி நடிகர் குறித்து அவர் பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நகைச்சுவை நடிகருக்கு பாடி டிமாண்ட் அதிகம் என்று பேசி இருக்கிறார்.

கிங் 24x7 youtube சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கவுண்டமணி அவர்களுக்கு இயற்கையிலேயே நகைச்சுவை உணர்வு உண்டு, திறமையானவர் கூட. ஆனால் அவை அனைத்தும் ஒரு குழந்தை தனமாகவே இருக்கும், நாம் ரசிக்கும்படியாகவே இருக்கும். பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை விரும்ப மாட்டார். அதேபோல ரசிகர் மன்றம் வைப்பதையும் அவர் விரும்பவில்லை. பல பேர் ரசிகர் மன்றம் வைக்க வேண்டும் என்று அவரை தேடி வந்தார்கள். ஆனால் அவர் எனக்கு எதற்கு ரசிகர் மன்றம், நான் இப்போது பீக்கில் இருப்பதால் ரசிகர் மன்றம் வைக்கிறீர்கள். 16 வயதினிலே படத்தில் நான் யார் என்றே தெரியாத போது, எனக்கு ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்தீர்களா? என்று அவர்களையே மடக்கி கேள்வி கேட்கக் கூடியவர் கவுண்டமணி.

goundamani bayilvan ranganathan

பாடி டிமாண்ட் அதிகம்: அதேபோல அதிகமான கிசுகிசுக்களிலும் கவுண்டமணி அவர்கள் சிக்கிருக்கிறார். தன்னுடன் இணைந்து நடித்த நடிகைகளுடன் அவர் உறவில் இருந்தார். பல நடிகர்களுக்கு பாடி டிமாண்ட் இருக்கும். ஆனால் அதை அவர்கள் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் கவுண்டமணி பாடி டிமாண்ட் விஷயத்தில் வெளிப்படையாகவே இருந்தார். அவருடன் நடித்த பல நடிகைகளுடன் அவர் தொடர்பில் இருந்தார். நடிகைகளே விரும்பி சென்றதால், இதில் எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்பட்டதில்லை. மேலும், மது, சிகரெட் என அனைத்து பழக்கமும் கவுண்டமணி அவர்களுக்கு உண்டு.

தொட்டதால் வாய்ப்பு தரல: ஆனால், நான் கவுண்டமணியால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் ஆவாரம்பூ படத்தில், நான் ஷர்மிளாவின் கணவராக நடித்து இருந்தேன். அப்போது, ஒரு காட்சியில் நான் ஷர்மிளாவை தூக்குவது போல காட்சி இருந்தது. படப்பிடிப்பு நடக்கும்போது நேரம் ஆகிவிட்டதால் கவுண்டமணி கிளம்பிவிட்டதால், அந்த காட்சியை அவர் பார்க்கவில்லை. ஆனால் படத்தின் டப்பிங்கின் போது அந்த காட்சியை அவர் பார்த்து விட்டு என்னை கண்டபடி திட்டினார். ஏனென்றால் ஷர்மிளாவிற்கும் அவருக்கும் அப்போது ஒரு உறவு இருந்தது. நீ எப்படி தூக்குவ, என்று கேட்டார். நான் இயக்குனர் கூறியதால் நடித்தேன் என்று சொன்னபோதும், அவர் சொன்னா நடிப்பியா? என்று கண்டபடி என்னை திட்டி விட்டு, நானே இதுவரைக்கும் அப்படி தூக்கியது இல்லை என்று சிரித்துவிட்டு சென்றுவிட்டார்.

மறக்கவே இல்லை: அத்தோடு அவர் அந்த விஷயத்தை மறந்து இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் அதை மறக்கவே இல்லை. அந்த படத்திற்கு பிறகு கவுண்டமணி அவர்கள் எந்த படத்திற்கும் என்னை அழைக்கவே இல்லை. அதன் பிறகு நான் அவருடன் சேர்ந்து நடிக்கவே இல்லை. அதுதான் அவருடன் நான் நடித்த கடைசி படம். இதுபோல எம்ஜிஆருடனும் ஒரு பிரச்சனை வந்தது. ஆனால், எம்ஜிஆர் அதை மறந்துவிட்டார். கவுண்டமணி அதை மறக்கவே இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X