'வணங்கான்' பெரியாரும் பிள்ளையாரும்.. பாலாவின் சித்து விளையாட்டு.. பிரபலம் சொல்வது என்ன!
சென்னை: சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது, இதில், அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலையையும், இன்னொரு கையில் பிள்ளையார் சிலையையும் வைத்து இருந்தார்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர்: இந்த போஸ்டர் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சினிமா மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி இது குறித்து போட்டி அளித்துள்ளார். அதில், இந்த போஸ்டரை பார்க்கும் போது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பிள்ளையார் பக்கத்தில் பெரியாரை வைத்துவிட்டாரே என்பது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
கதைக்கு தொடர்பு இல்லை: அதுமட்டுமில்லாமல் பாலா மிகப்பெரிய பக்திமான், கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு மனிதர். அவருடைய படத்தில் பெரியாரும், பிள்ளையாரும் இருக்கும் போது, அவர் பெரியாரை எப்படி சித்தரிக்கப்போகிறார் என்பது தெரியவில்லை. வணங்கான் படத்தின் கதை எனக்கு ஓரளவிற்கு தெரியும், வணங்கான் படத்திற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

ஒருவேளை பெரியாரும், பிள்ளையாரும் தற்போது பேசு பொருளாக இருப்பதால், இதுபோன்று சித்தரிக்கப்பட்டதா என எனக்குத் தோன்றுகிறது. சினமாக்காரர்கள் எப்போதும் விளம்பரத்தை விரும்புவதால், இது ஒருவகையில் விளம்பரத்திற்காக பாலா செய்த சித்து வேலையாக இருக்கலாம்.
சூர்யா விலக காரணம்: மேலும், வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியதற்கு காரணம் பாலாவின் நடவடிக்கைதான். இந்த படத்தில் சூர்யா தான் தயாரிப்பாளர் அப்படி இருக்கும் போது, இந்த படத்தில் பாலா பொறுப்பு இல்லாமல் நடந்து கொண்டதால் சூர்யா அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். அதற்கும் வணங்கான் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.


Click it and Unblock the Notifications











