அட்லீ கோலிவுட் காப்பி.. லோகேஷ் ஹாலிவுட் காப்பி.. சரக்கு தீர்ந்துவிட்டதா? ஆதங்கப்பட்ட பிரபலம்!
சென்னை: அட்லீ கோலிவுட் படத்தை பார்த்து காப்பி அடிக்கிறார், லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் படத்தை பார்த்து காப்பி அடிக்கிறார் என்று செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
கடந்த 19ந் தேதி வெளியான இத்திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.
தளபதி விஜய்யின் லியோ: விக்ரம் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ், விஜய்யுடன் இரண்டாவது முறை இணைந்து உள்ளதால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் இருந்தது. இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் அதிநவீன கேமராக்களின் உதவியுடன் வேகவேகமாக நடைபெற்றது.
லோகேஷ் விளக்கம்: இப்படத்தின் டிரைலர் வெளியான போதே இந்த படம் ஆங்கிலப் படத்தின் தழுவல் என விமர்சனம் எழுந்தது. அது பொய் என இயக்குனர் தரப்பிலிருந்து கூறப்பட்டது. A History of Violence என்ற படத்தில் ஒரு சில காட்சிகளை மட்டுமே நாங்கள் எடுத்து உள்ளோம். முழு படமும் இல்லை என்று லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்திருந்தார்.
லோகேஷ் ஹாலிவுட் காப்பி: தற்போது படம் வெளியாகி உள்ள நிலையில் நெட்டிசன்கள் லோகேஷ் கனகராஜை ட்ரோல் செய்து வருகின்றனர். இது குறித்து மூத்த சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அளித்துள்ள பேட்டியில், அட்லீ கோலிவுட் படத்தை பார்த்து காப்பி அடித்து வருகிறார் என்றால், லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் படத்தை பார்த்து காப்பி அடித்து வருகிறார். ஆனால், லோகேசை விட அட்லி எவ்வளவோ பரவாயில்லை. ஏன் என்றால் அவர் தயாரிப்பாளரை எப்படியாவது காப்பாற்றி விடுகிறார்.
சரக்கு தீர்ந்துவிட்டதா: ஆனால், லோகேஷ் என்ன படத்தை எடுத்துவைச்சி இருக்காரு பெற்ற குழந்தைகளை நரபலி கொடுப்பது ஒரு கதையா...அந்த இடத்திலேயே லியோ படத்தின் கதை சரிந்து விட்டது. இது லோகேஷின் படமா என்று யோசிக்க வைத்துவிட்டது. ஹாலிவுட் படத்தின் காட்சியை அப்படியே படத்தில் பயன்படுத்தி விட்டு நன்றி கார்டு போட்டு இருக்கிறார்.

பத்து படம் மட்டுமே எடுக்க போகிறேன் என்று சொன்ன லோகேஷ் கனகராஜிற்கு ஐந்தாவது படத்திலேயே சரக்கு தீர்ந்துவிட்டதா என யோசிக்க வைத்துவிட்டது என செய்யாறு பாலு லியோ படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











