கொடுமைப்படுத்திய சித்தி.. சினிமாவை விட்டு ஓடிய அஞ்சலி.. செய்யாறு பாலு சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அஞ்சலி. அங்காடித் தெரு, மங்காத்தா, இறைவி என பல வெற்றிப்படத்தில் நடித்து சினிமாவில் பிரகாசித்த நடிகை அஞ்சலிக்கு தனிப்பட்ட வாழ்க்கை போராட்டமாகவும் சிக்கலாகவும் இருந்தது என்று சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். அங்காடித் தெரு, மங்காத்தா, இறைவி, பேரன்பு, பலூன், சிந்துபாத் ஆகிய படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான பக்ஹிகரனா என்ற இணையத் தொடர் ஜூலை மாதம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

anjali jay cheyyaru balu

பள்ளியில் படிக்கும் போதே: அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்த நடிகை அஞ்சலி திடீரென தமிழ் சினிமாவில் காணாமல் போனதற்காக காரணம் குறித்து சினிமா விமர்சகரான செய்யாறு பாலு யூடியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஆந்திராவில் பிறந்து வளர்ந்த அஞ்சலி தனது சித்தியுடன் சென்னையில் உள்ள வடபழனி பள்ளியில் படிக்கிறார். அப்போது கற்றது தமிழ் திரைப்படத்திற்காக இயக்குநர் ராம் புதுமுகத்தை தேடிக்கொண்டு இருந்தார். அப்போது, எதார்த்தமாக அவர் கண்ணில் பட்டவர் தான் நடிகை அஞ்சலி. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் பத்தாம் வகுப்பு தான் படித்துக்கொண்டிருந்தார்.

சிறப்பான படம்: முதல் படத்திலேயே டேக்கே இல்லாமல் வசனத்தை பேசி படப்பிடிப்பு தளத்திலேயே கைத்தட்டலை பெற்றார். முதல் படமே அஞ்சலிக்கு சிறந்த நடிகை என்று பெயர் பெற்றுக்கொடுத்தது. கற்றது தமிழ் படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் அந்த படம் பேசக்கூடிய திரைப்படமாக இருக்கிறது அதற்கு காரணம் அஞ்சலியின் உணர்வுபூர்வமான நடிப்பு.

எதார்த்தமான நடிப்பு: அதன் பின், அங்காடி தெரு படத்திற்காக வசந்த பாலன் நடிகையை தேடிக்கொண்டிருந்தார். அப்போது கற்றது தமிழ் படத்தை தொலைக்காட்சியில் பார்த்து விட்டு, இந்த முகம் அந்த படத்திற்கு சரியாக இருக்கும் என்று அஞ்சலியை தேர்வு செய்தார். அங்காடித் தெரு படத்தில் நடிக்க நேரடியாகவே பல துணிக்கடைகளுக்கு சென்று பெண் விற்பனையாளர்களிடம் பேசி படத்தில் மிகவும் இயல்பாக நடித்திருந்தார்.

anjali jay cheyyaru balu

ஜெய்யுடன் காதல்: இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அஞ்சலி, ஜெய்யுடன் இணைந்து எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தார். அந்த படத்தில் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்தது. இதையடுத்து இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்த வதந்திக்கு இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், கதை சொல்ல இயக்குநர்கள் வீட்டிற்கு சென்ற போது இருவரும் ஒரே வீட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

சித்திக் கொடுமை: இந்த நேரத்தில் தான் நடிகை அஞ்சலி சித்தியிடம் பல கொடுமையை அனுபவித்தார். அவரின் டார்ச்சர் தாங்க முடியாமல், ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று சினிமாவை விட்டு விலகி ஆந்திராவிற்கே சென்றுவிட்டார். அங்கு, தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரிடம் நடந்ததை சொல்லி, கண்ணீர் வடிக்க, நான் இருக்கிறேன் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியதைத் தொடர்ந்து, அஞ்சலி தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்று செய்யாறு பாலு அஞ்சலி குறித்து பல தகவல்களை அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X