அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்தார்கள்.. புட்டுபுட்டு வைத்த சமீரா ரெட்டி.. கெஞ்சிய பிரபலங்கள்!

சென்னை: வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சமீரா ரெட்டி. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய சமீரா ரெட்டி, மீ டூ விவகாரம் பூதாகரமானது போது, சினிமாவில் தன்னை யார் யாரெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்தார்கள் என்பதை துணிச்சலாக சொல்லி கதிகலங்க வைத்தார் என்று செய்யாறு பாலு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சினிமா மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, அளித்துள்ள பேட்டியில், நடிகை சமீரா ரெட்டி ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட மும்பையில் வளர்ந்த பெண். இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்ததால், மாடலிங்கில் சென்று ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து, தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக நடிக்க ராஜகுமாருடு என்ற படத்தின் ஆடிசனுக்கு சென்றிருந்தார். அனைத்து தேர்விலும் தேர்வான சமீரா ரெட்டிக்கு கடைசி நேரத்தில் அந்த படத்தில், நடிக்கும் வாய்ப்பு கை நழுவிப்போனது.

cinema journalist Cheyyaru Balu talks about Vaaranam Aayiram actress Sameera Reddy

நடிகை சமீரா ரெட்டி: கடைசி நேரத்தில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கைநழுவிப்போனதால், மனம் நொந்துப்போன சமீரா ரெட்டி, சினிமாவும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டு, பிரபல வாட்ச் கம்பேனி ஒன்றில் வேலைக்கு சென்றார். அதன் ஆங்கில பத்திரிக்கை ஒன்றில், சமீராவின் புகைப்படம் வெளிவர அதைப்பார்த்த, பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரால் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தவுடன் அடுத்தடுத்து மூன்று பாலிவுட் படங்களில் நடித்தார்.

வாரணம் ஆயிரம்: பாலிவுட்டில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்த சமீராவிற்கு தெலுங்கிலும் இந்தியிலும் மாறி மாறி படவாய்ப்புகள் வந்தன. அதன் பின் தமிழில் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு சமீரா ரெட்டியின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தது. இதையடுத்து, அஜித்துக்கு ஜோடியாக அசல், வெடி, வேட்டை என அடுத்தடுத்த படத்தில் நடித்து தமிழ் ஆடியன்சுக்கு பரிச்சயமான முகமாக மாறினார்.

திருமணம்: படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த சமீரா ரெட்டி, 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்க கணவர் அனுமதித்த போதும், சமீராவிற்கு அதில் உடன்பாடு இல்லாததால் ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்டு விலகினார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்: இந்த நேரத்தில் மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்தது, அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட சமீரா ரெட்டி, சினிமாவில் தன்னை யார் யாரெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்தார்கள், யார் டார்ச்சர் கொடுத்தது என அனைத்தையும் புட்டு புட்டு வைத்து பாலிவுட் மற்றும் கோலிவுட்டை கதிகலங்க வைத்து பெரிய சம்பவத்தையே செய்துவிட்டார். சில பிரபலங்கள் சமீரா ரெட்டிக்கு போன் செய்து தயவு செய்து என் பெயரை சொல்லாதே என்று கெஞ்சும் அளவுக்கு துணிச்சலான பெண்ணாக நடிகை சமீரா ரெட்டி நடந்து கொண்டார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X