மிஷ்கினுக்கு மரியாதையே தெரியாது.. அரை பைத்தியம்.. எல்லாமே திருட்டுக்கதை.. ஓவர் டென்ஷனான பிஸ்மி!
சென்னை: நடிகர் விஜய்யை மிஷ்கின் ஒருமையில் பேசியதை கண்டித்து வலைப்பேச்சு பிஸ்மி தனது காட்டமான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், லியோ படம் ரொம்ப நல்லா வந்திருக்கிறது, தம்பியும் பார்த்திருக்கான். விஜய் தம்பியும் பார்த்திருக்கான். ரொம்ப பிடிச்சிருக்காம். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று பேசி இருந்தார்.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: மிஷ்கின் விஜய்யை அவன், இவன் என ஒருமையில் பேசியது தளபதி ரசிகர்களுக்கு பிடிக்காததால், மிஷ்கினை கண்டித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி அலப்பறை செய்தனர். இந்த விவகாரம் இணையத்தில் பூதாகரமான நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் வலைப்பேச்சு பிஸ்மி, இவ்விவகாரம் குறித்து பேசி இருந்தார்.
மிஷ்கின் மனநோயாளி: அதில், மிஷ்கினை பார்க்கும் போது அவர் அரை மனநோயாளியாக மாறிவிட்டாரோ என்று தான் தோன்றுகிறது. என்ன காரணம் என்றால், அவர் சினிமாவில் எதையுமே சாதிக்கவில்லை. அவர் எடுத்த படங்கள் எல்லாமே திருட்டுப்படங்கள் தான். இதை நீங்க அன்டர்லைன் பண்ணிக்கூட சொல்லலாம். எதுவுமே அவரின் சுய அறிவில் உதித்த படங்கள் கிடையாது.
திருட்டுக்கதை: வெளிநாட்டு படங்களில் இருந்தும், ஆங்கில புத்தகங்களில் இருந்தும் கதையை எடுத்து அதை அப்படியே மாற்றி தமிழ் மக்களுக்கு ஏற்றமாதிரி படம் எடுக்கிறார். இயக்குநர் என்ற பெயரில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள். தமிழ் சினிமாவில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள இடம் ரொம்ப அதிகம் என்று தான் நான் நினைக்கிறேன்.

அரை பைத்தியம்: அப்படிப்பட்ட நீங்கள் அனைவரையும் சகட்டுமேனிக்கு வாடா.. போடா.. அவன்..இவன் என்று பேசுவது நல்ல பண்பு கிடையாது. கிட்டத்தட்ட இது மனபிறழ்வு, அரை பைத்தியம் என்றுக்கூட மொழி பெயர்கலாம். அது மிகவும் தவறான விஷயம். விஜய் மாதிரி செல்வாக்கு இருக்கும் ஒருவரை பொதுவெளியில் அவன்..இவன்..என் தம்பி என்று பேசுவதற்கு யார் உங்களுக்கு உரிமை கொடுத்தது.
எல்லாமே தவறுதான்: மிஷ்கின் பேசியதும் தவறு, அதற்காக விஜய் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியது அதைவிடவும் தவறான விஷயம். அதேபோல யாராக இருந்தாலும் அவரைப்பற்றி பொது இடத்தில் மரியாதையோடுதான் பேசவேண்டும் என் வலைப்பேச்சு பிஸ்மி தனது ஆதங்கத்தை அந்த பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார்.


Click it and Unblock the Notifications











