தமிழ் சினிமாவை அழிச்சுடாதீங்க.. பெரிய ஹீரோக்கள் பன்ற வேலையா இது.. முக்கிய பிரபலம் கடு்ம் கோபம்

சென்னை: மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள டெஸ்ட் திரைப்படம் திரையரங்கிற்கு வராமல் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியானது. இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மாதவன் பட புரோமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இதனிடையே, தமிழ் சினிமா நீங்க காரணம் ஆகிவிடாதீர்கள் என நடிகர் மாதவனுக்கு முக்கிய பிரபலம் எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தயாரிப்பாளரும், இயக்குநருமான சசிகாந்த் இயக்கியுள்ள டெஸ்ட் திரைப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மீன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படம் கடந்த 4ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இப்படம் திரையரங்கிற்கு வராமல் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டது. சினிமா விமர்சகர்களும் நயன்தாராவின் பட தோல்வியால் தான் டெஸ்ட் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர். டெஸ்ட் படத்தை பார்த்த விமர்சகர்கள் சுமாரான கதை நல்ல விறுவிறுப்ப தருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். ப்ளூசட்டை மாறனும் இப்படத்தை பாராட்டி பேசியிருந்தா். நயன்தாரா, மாதவன் நடிப்பு பார்க்க நன்றாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

cinema-owners-association-president-tiruppur-subramaniam-warns-madhavan

கொரோனாவுக்கு பின் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், ஓடிடி தளம் ஆதிக்கம் செலுத்தியத அனைவரும் அறிந்தது தான். இதி, நெட்பிளிக்ஸ், அமேசான், ஜீ5, ஆஹா, சோனி லிவ், டென்ட்கொட்டா போன்ற ஓடிடி தளங்கள் இருக்கின்றன. சிறிய பட்ஜெட் படங்கள் திரையரங்கில் ரசிகர்களின் கவனத்தை பெறுவது கடினம். இதனால், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்களை ஈர்த்து விமர்சன ரீதியாக அப்படத்திற்கு பெரிய ரீச் கிடைக்கின்றன. ஆனால், பெரிய பட்ஜெட், ஸ்டார் ஹீரோக்கள் படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் போன்ற ஹீரோக்களின் படங்களை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஜெய்பீம் ரிலீஸ்: ஆனால், ஓடிடி தளத்தில் படத்தை நேரடியாக ரிலீஸ் செய்ய நடிகர் சூர்யா முக்கிய உதாரணமாக இருக்கிறார். கொரோனா காலத்தில் ஜெய்பீம் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டார். அதேபோன்று இயக்குநர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தையும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டார். இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. அப்போது திரையரங்க உரிமையாளர்கள் சூர்யா, பா.ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்து பேசினர். தமிழ் சினிமாவிற்கு அழிவு காலம் என்றும் விமர்சித்தனர். கொரோனா காலத்தில் பொருளாதார பாதிப்பால் பல திரையரங்குகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்ட கொடூரமும் நிகழ்ந்திருக்கிறது. காரணம் மால்களின் அதிகரிப்பால் திரையரங்குகள் கல்யாண மண்டபங்களாக மாறிவிட்டதாகக் கூறப்பட்டது.

cinema-owners-association-president-tiruppur-subramaniam-warns-madhavan

மாதவனுக்கு எச்சரிக்கை: டெஸ்ட் படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றாலும் இதற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, தமிழ் சினிமா அழிவிற்கு மாதவன் போன்றவர்கள் காரணமாகிவிட கூடாது. திரையரங்கிற்கு வந்த பிறகே ஓடிடி தளத்திற்கு படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால், மாதவன் நடித்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகிருப்பது அதிருப்தியை தருகிறது. திரையரங்கை காக்க ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் வருடத்திற்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் .

கடந்த 10 வருடத்திற்கு முன்பு ஒரு வருடத்தில் பெரிய நடிகர்கள் 3 படத்தில் நடித்தனர். தற்போது வணிகத்தை மையப்படுத்தி ஒரு படத்தில் மட்டும் நடிப்பது சரியா என்பது தெரியவில்லை. இந்த நிலை மாற வேண்டும். கோடி கணக்கில் சம்பளம் பெறும் ஹீரோக்கள் அலட்சியமாக இருக்கின்றனர். சினிமாவை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது. சினிமாவை அழியும் நோக்கில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X