விஜய் ஶ்ரீ ஜி இயக்கும் 'பவுடர்' படம் மூலம்.. நடிகர் ஆகிறார் பிரபல சினிமா பிஆர்ஓ நிகில் முருகன் !

By

சென்னை: பிரபல சினிமா பி.ஆர்.ஓ. நிகில் முருகன் நடிகராக அறிமுகமாகிறார்.

இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, தனது முதல் படமான 'தாதா 87'-ல் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை டானாக அறிமுகப்படுத்தி இருந்தார்.

தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பிஆர்ஓ நிகில் முருகன்

பிஆர்ஓ நிகில் முருகன்

அவருடைய மூன்றாவது படமாக உருவாகி வருகிறது, 'பவுடர்'. இதில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா, வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், படத்தில் வலிமை மிக்க கேரக்டரில் நடிகராக அறிமுகமாகிறார், பிஆர்ஓ நிகில் முருகன்.

லாக் டவுன்

லாக் டவுன்

நிகில் முருகன் கேரக்டர் பற்றி இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. கூறியதாவது: "நிகில் முருகனை திரையுலகம், 25 ஆண்டு காலமாக சிறந்த பிஆர்ஓவாக அறியும். முன்னணி சினிமா பிஆர்ஓ.வுக்கே உரித்தான பாணியில் எப்போதுமே பரபரப்பாக இருக்கும் அவரை, லாக் டவுன் நேரத்தில் நான் பயன்படுத்திக் கொண்டேன்.

நடிப்பதில் விருப்பம்

நடிப்பதில் விருப்பம்

முதலில், 'நடிப்பதில் விருப்பம்தான். ஆனால் பிஆர்ஓ. ஆக பணிபுரிந்து வருகிறேனே' என்று தயங்கினார். பின்னர் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். எனது முதல் படத்தில் சாருஹாசன் சாரை ஒரு டானாக அறிமுகப்படுத்தினேன். அந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. அதேபோல், பப்ஜி படத்தில் ஐஸ்வர்யா தத்தாவை முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடிக்க வைத்துள்ளேன்.

களமிறக்கி இருக்கிறேன்

களமிறக்கி இருக்கிறேன்

10 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் ஜனகராஜை தாதா -87 படம் மூலம் மீண்டும் கொண்டு சேர்த்தேன். இப்போது, நிகில் முருகனை நடிகராக களமிறக்கி இருக்கிறேன். இவர் கேரக்டர் பெயர் ராகவன். 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமல்ஹாசன் சூட்டிக்கொண்டதால் வலிமை பெற்ற அந்தப் பெயரை, 'பவுடர்' படத்தில் நிகில் முருகனுக்கு சூட்டியுள்ளேன்

லீயாண்டர் லீ மார்ட்டி

லீயாண்டர் லீ மார்ட்டி

படத்துக்கு ராஜா பாண்டி ஒளிப்பதிவு செய்கிறார். லீயாண்டர் லீ மார்ட்டி இசை அமைக்கிறார். கதை வசனம் எழுதி நான் இயக்குகிறேன். ஜி மீடியா நிறுவனம் தாயரிக்கிறது. அடுத்த ஆண்டு இந்தப் படம் ரிலீஸ் ஆகும். இவ்வாறு விஜய் ஶ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X