கள்ளநோட்டு வழக்கில் சினிமா தயாரிப்பாளரை தேடுகிறது போலீஸ்
மதுரை: கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டு 'சைதை செல்லா' என்ற சினிமா படத்தை தயாரித்த தயாரிப்பாளரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட சிவமணி, அவரது கூட்டாளி கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ராஜா ஆகியோரை நெய்வேலி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி, திருச்சியை சேர்ந்த சுந்தர், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நெத்திகுளத்தை சேர்ந்த முரளி (எ) முருகேசன் (36) ஆகியோரை கைது செய்ய, தனிப்படை போலீசார் மதுரை சென்றனர்.
போலீசார் தேடுவதை அறிந்த முரளி தலைமறைவானார். சைதை செல்லா' என்ற சினிமாவை முரளி தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் திரையிடப்படவுள்ளது.
கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டு, முரளி சினிமா படம் தயாரித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments
கள்ளநோட்டு சினிமா தயாரிப்பாளர் சைதை செல்லா போலீஸ் மதுரை cinema fake currency madurai producer saidai chella


Click it and Unblock the Notifications