சாயாதேவி- ராதிகாவை ஒன்று சேர்த்த வரலட்சுமி திருமணம்.. மகிழ்ச்சியில் சரத்குமார்!

சென்னை: நடிகை வரலட்சுமிக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அவர்களது திருமணம் தாய்லாந்தில் நடக்கிறது. இந்தத் திருமணத்தில் இரு குடும்பத்தினரின் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள். தொடர்ந்து, திருமண வரவேற்பு சென்னையில் நடக்கவுள்ளது.

வரலட்சுமி, நிக்கோலய் சச்தேவ் திருமண கொண்டாட்டங்கள் கடந்த சில தினங்களாக களைகட்டி உள்ளன. சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடியின் சங்கீத் பங்க்‌ஷன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்த சங்கீத் விழாவில் நடிகை ராதிகா டான்ஸ் ஆடி அசத்தி இருக்கிறார். முதலில் சோலோவாக ஆடிய ராதிகா, பின்னர் நடிகர் சரத்குமார் உடன் சேர்ந்து ரெளடி பேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

Varalaxmi Sarathkumar nicholai sachdev Wedding

பிரபலங்கள்: மேலும், சங்கீத் விழாவில் நடிகைகள் திரிஷா, சங்கீதா, மீனா,விஜயகுமாரின் மகள் அனிதா, வனிதாவின் மகன் ஹரி, நடிகர்கள் பிரபுதேவா, பிரபு, சந்தீப் கிஷன், தயாரிப்பாளர், இயக்குநர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பயில்வான் ரங்கநாதன்: இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார், பயில்வான் ரங்கநாதன் அதில், வரலட்சுமிக்கு 38 வயசு, நிக்கோலக்கு 41 வயதாகிறது, மும்பையில் பெரிய ஆர்ட் கேலரி வைத்து இருக்கிறார். அது பரபரப்பாக இருக்காது, ஆனால், எதாவது ஒரு பொருள் விற்கப்பட்டாலும், அது நன்றாக லாபத்தை தரும், அப்பா செய்த தொழிலை தற்போது அவரது மகன் செய்து வருகிறார். இந்த திருமணத்தில் சரத்குமார், ராதிகா, சாயா தேவி, ராதிகாவின் மகள் ரயன் அவரின் கணவர் என அனைவரும் கலந்து கொண்டனர். சரத்குமார் முதல் மனைவி இந்த பக்கம், இரண்டாவது மனைவி இந்தப்பக்கம் என எந்தவித சங்கடமும் இல்லாமல் இருக்கிறார்.

Varalaxmi Sarathkumar nicholai sachdev Wedding

ஒன்று சேர்ந்த குடும்பம்: அதேபோல நிகோலாய்விற்கு ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு முன் கவிதா என்பவருடன் திருமணம் நடந்த அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் மகள் தற்போது, அம்மா கவிதாவுடன் இருக்கிறார். ஆனால், மகளும் மும்பையில் நடைபெற்ற திருமண வரவேற்பில் கலந்து கொண்டு இருக்கிறார். நிகோலாய் மற்றும் அவரது மகள் இருவரும் சிரித்த முகத்துடன் இருக்கும் போட்டோக்களை பார்க்க முடிந்தது. உண்மையில் இந்த திருமணம் இரண்டு குடும்பத்தையும் சேர்த்து உள்ளது என்று தான் சொல்லவேண்டும் என்று பயில்வான் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X