விசித்ரா சொன்னது பொய்.. எல்லாமே விஜய் டிவியின் பிளான்.. பயில்வான் ரங்கநாதன் அதிரடி!

சென்னை: நடிகை விசித்ரா சொன்னது பொய் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் தெரிவித்துள்ளார்

100 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமான நடிகை விசித்ரா குக்வித் கோமாளி ஷோ மூலம் நல்ல பிரபலமாகி தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

cinema reporter Bayilvan Ranganathan talks About Bigg Boss Vichithra

பிக்பாஸ் 7வது சீசனில் நடிகை விசித்ரா முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளியை தொடர்ந்து தற்போது பிக்பாஸிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

நடிகை விசித்ரா: இந்நிலையில், 51வது எபிசோட்டில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தை பற்றி கூற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய விசித்ரா, தான் ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறினார்.

படுக்கைக்கு அழைத்தார்: மேலும், இது பற்றி நான் சங்கத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் எனக்கு ஆதரவாக யாருமே வரவில்லை. அதையெல்லாம் விட்டுட்டு போய் வேலையை பாருமா என சங்க தலைவர் கூறியதாக கண்ணீர் மல்க கூறி இருந்தார். இது சோஷியல் மீடியாவில் மிகப் பெரிய புயலை கிளப்பி வருகிறது.

விஜய் டிவியின் பிளான்: இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பயில்வான் ரங்கநாதன், 2000ம் ஆண்டு நடந்த விஷயத்தை நடிகை விசித்ரா இப்போது பேசுவதற்கு என்ன காரணம், மன்சூர் அலிகான் விவகாரம் பெரியதாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு விஷயத்தை விஜய் டிவி பிளான் போட்டு செய்து இருக்கிறது.

இப்போது சொல்ல என்ன காரணம்: குடித்து விட்டு இரவில் வந்து கதவை தட்டுவார், நான் ரூம் ரூமா மாறினேன், அதற்கு உதவியது அப்போது மேனேஜராக இருந்த கணவர் என்று இப்போது சொல்லும் விசித்ரா அப்போது காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கலாமே, இப்போது இந்த விஷயத்தை சொல்ல காரணம், பிக் பாஸை யாரும் பார்ப்பதில்லை, அதற்காக விஜய் டிவி செய்த வேலை இது.

விசித்ரா சொன்னது பொய்: திருமணமாகி 3 குழந்தைகளை பெற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வரும் விசித்ரா, இந்த நேரத்தில் இந்த பாலியல் புகாரை கூற என்ன காரணம், மேலும், பெரிய நடிகர் என்று சொன்னால் போதுமா யார் என்று சொல்ல தைரியம் இல்லாதவர் ஏன் அதை இப்போது சொல்கிறார். அவர் சொல்வது எல்லாமே பொய், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓட்டுவாங்குவதற்காக இப்போது இந்த விஷயத்தை பேசி இருக்கிறார் என்று பயில்வான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X