Jayam Ravi: போட்டுக்க துணி இல்ல.. செலவுக்கு கூட பணம் இல்ல.. தவிக்கும் ஜெயம் ரவி!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பிரச்சனை பூதாகரமாகி உள்ள நிலையில் இதுகுறித்து சினிமா பத்திரிக்கையாளர், ஜெயம் ரவி செலவுக்குகூட பணம் இல்லாமல் தவிப்பதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவெடுத்து விவாகரத்தை அறிவித்துள்ளார் என்று அவரது மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டதையடுத்து ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவகாரம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது.

நடிகர் ஜெயம் ரவி: இதுகுறித்து பேசிய ஜெயம் ரவி, ஆர்த்திக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டேன். அவர், விவாகரத்து விஷயமே எனக்கு தெரியாது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், ஒரு பாடகி உடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார். அவர் பாடகியை தாண்டி ஒரு சைக்காலஜிஸ்ட், அவர் பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார். இருவரும் சேர்ந்து இலவசமாக சேவை செய்ய ஸ்பிரிச்சுவல் சென்டர் மாதிரி கூட ஆரம்பிக்கலாம் என்று இருந்தோம். இந்த பெண்ணை பற்றி தவறாக பேசாதீர்கள் என்று பேசி இருந்தார்.
ஆர்த்தியின் அதீத காதல்: இதையடுத்து, செவ்வாய் கிழமை, சென்னை ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கும் ஆர்த்தியின் வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டு தர கோரி அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் மனைவி ஆர்த்தி மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய சினிமா பத்திரிக்கையாளர் சபீர் ஆகாயம் சினிமா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், திருமணத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் ஆர்த்தி இருவருமே சந்தோஷமாகத்தான் வாழ்த்து வந்தார்கள். இருவரும் சேர்ந்து தான் சம்பாதித்து வீடு வாசல் வாங்கினார்கள். ஆர்த்தியின் அதீத பாசமா, அதீத காதலா, இல்லை சந்தேகமா எது என்று தெரியவில்லை. இப்போது, இருவரும் பிரியும் முடிவில் இருக்கிறார்கள். என்ன பிரச்சனை என்று ஆர்த்தியிடம் கேட்டால் தான் சொல்ல முடியும்.
ஆர்த்தியின் கட்டுப்பாட்டில்: ஆனால், தற்போது ஜெயம் ரவி, ஆர்த்தி மீது புகார் அளித்திருப்பதற்கு காரணம், பாஸ்புக், ஆதார், பேன் கார்டு, வங்கி புத்தகம் என அனைத்துமே ஆர்த்தியிடம் உள்ளது. ஜெயம் ரவி, நண்பர்களுடன் எங்காவது டின்னருக்கு செல்ல வேண்டும் என்றாலும், இல்லை நண்பர்களுடன் வெளியில் செல்ல வேண்டும் என்றாலும் ஆர்த்தியிடம் காரணத்தை சொல்லி பணத்தை வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். இது போன்ற அழுத்தத்தால் ஜெயம் ரவி இந்த முடிவு எடுத்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
செலவுக்கு கூட பணம் இல்ல: இப்போது, ஜெயம் ரவி போட்டுக்க துணி, செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். இருவரும் சேர்ந்து இருந்த போது, அன்பின் காரணமாக பணத்தை எல்லாம் தன் மனைவியிடம் கொடுத்துள்ளார். இப்போது பிரச்சனை ஆனதை அடுத்து அதை மீட்டுத்தர சொல்லி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கக்கூட பெரிய அளவில் போராடியதாக ஜெயம் ரவி தரப்பில் சொல்லப்படுகிறது. ஆர்த்தி என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும்.
குழந்தைகள் மீது அதீத பாசம் கொண்ட ஜெயம் ரவி தனது வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று பத்திரிக்கையாளர் சபீர் கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த இணையவாசிகள் ஈகோ கருத்து வேறுபாடுகளை மறந்து சேர்ந்து வாழும்படி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











