twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி 'பாவக் கதைகள்'.. 'சூரரைப் போற்று' சுதா கொங்கராவின் 'தங்கம்' கதை இதுதான்!

    By
    |

    சென்னை: மூன்றாம் பாலினத்தவர்களின் வலியை சொல்லும் படமாக 'தங்கம்' இருக்கும் என்று இயக்குனர் சுதா கொங்கரா கூறியுள்ளார்.

    நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாக இருக்கும் ஆந்தாலஜி படம் 'பாவக் கதைகள்'.

    இதில் வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தலா ஒரு படத்தை இயக்கியுள்ளனர்.

     ரஜினிக்கு பாதி.. கமலுக்கு பாதி சோனியாவின் சுவாரஸ்ய பதில்... புடவையில் ஜொலிக்கும் சஞ்சிதா! ரஜினிக்கு பாதி.. கமலுக்கு பாதி சோனியாவின் சுவாரஸ்ய பதில்... புடவையில் ஜொலிக்கும் சஞ்சிதா!

    சுதா கொங்கராவின் தங்கம்

    சுதா கொங்கராவின் தங்கம்

    இவை அனைத்தும் ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள கதையாகும். இதன் டிரைலர் கடந்த 3 ஆம் தேதி இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் சூரரைப் போற்று சுதா கொங்கரா இயக்கியுள்ள கதையின் பெயர், தங்கம். கவுதம் மேனன் இயக்கியுள்ள கதைக்கு வான்மகள் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

    லவ் பண்ணா உட்ரணும்

    லவ் பண்ணா உட்ரணும்

    விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள கதைக்கு, லவ் பண்ணா உட்ரணும் என்றும், வெற்றிமாறன் கதைக்கு ஓர் இரவு என்றும் டைட்டில் வைத்துள்ளனர். சுதா கொங்கராவின் தங்கம் படத்துக்கு ஷான் கருப்பசாமி வசனம் எழுதியுள்ளார். சாந்தனு பாக்யராஜ், நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ், பவானி ஸ்ரீ நடித்துள்ளனர்.

    வலி சொல்லும் படம்

    வலி சொல்லும் படம்

    இதில் சாந்தனுவின் காதலுக்காக உயிர்த்தியாகம் செய்யும் மூன்றாம் பாலினத்தவராக, நடிகர் காளிதாஸ் நடித்திருக்கிறார். அவருடைய கேரக்டர் புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. படம் பற்றி சுதா கொங்கரா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மூன்றாம் பாலினத்த வர்களின் வலியை சொல்லும் படம் இது.

    தீர்வை கொடுங்கள்

    தீர்வை கொடுங்கள்

    சினிமா அவர்களின் இயல்பை வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்க வேண்டும். உங்களால் முடிந்தால் ஒரு தீர்வை கொடுங்கள். அதுமட்டும்தான் அவர்கள் பற்றிய தவறான கருத்தை மாற்றும் வழியாக இருக்கும். இந்தப் படம் பண்ணும்வரை அவர்கள் வாழ்க்கை பற்றி யோசித்தது இல்லை. பயமாகத்தான் உணர்ந்தேன்.

    Recommended Video

    தமிழ் சினிமாவுக்கு சொந்த OTT- ON THE WAY | JAGUAR THANGAM | PIRAR THARA VARA PM | FILMIBEAT TAMIL
    வேதனை வாழ்க்கை

    வேதனை வாழ்க்கை

    ஆனால், இந்தப் படத்துக்காக அவர்கள் ஆசைகள், உணர்வுகளை அறிந்து கொள்ள பல ஆய்வுகளை மேற்கொண்டேன். அவர்களில் பலரை சந்தித்தேன். அதன் அடிப்படையில் இதை உருவாக்கி இருக்கிறேன். அவர்களின் வேதனையான வாழ்க்கையை இதில் சொல்லி இருக்கிறேன். படத்தைப் பார்த்தால் அவர்களை இனி மரியாதையாக நடத்துவார்கள் என்றார்.

    English summary
    Sudha Kongara's latest short for Netflix Tamil anthology 'Paava Kadhaigal, She places a transgender person in the centre of a conflict to chronicle the the story of guilt, shame, acceptanceand love.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X