இந்த விருது ரஜினியின் புகழ் கிரீடத்தில் ஒரு ரத்தினமாக ஜொலிக்கும்.. திரை பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்ததற்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் 1975ஆம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானார். ஆன்ட்டி ஹீரோவாக தனது கேரியரை தொடங்கிய ரஜினிகாந்த் இன்று வரையும் முன்னணி ஹீரோவாகவும் மாஸ் ஹீரோவாகவும் வலம் வருகிறார்.

தனது ஸ்டைலாலும் நடிப்பாலும் இந்தியா மட்டுமின்றி உலகம் சீனா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகள் என உலகம் முழுக்கவும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

பொன்விழாவில் விருது

பொன்விழாவில் விருது

திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்தின் சாதனையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்திருக்கிறது. கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

உலகறிய செய்தவர்

உலகறிய செய்தவர்

இதனை முன்னிட்டு திரைத்துறையினர் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் ராதாரவி, வாழ்நாள் சாதனையாளர் விருதிற்கு தகுதியானவர் நடிகர் ரஜினிகாந்த்; அவருக்கு விருது வழங்கப்படுவது தமிழகத்திற்கு பெருமை! நடிப்பு மூலம் நாட்டின் பெருமையை உலகறிய செய்தவர் என தெரிவித்திருக்கிறார்.

சிறந்த மனிதர்

சிறந்த மனிதர்

நடிகர் பார்த்திபன், வாழ்நாள் சாதனையாளர் விருது தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது; அனைத்திற்கும் பொருத்தமான சிறந்த மனிதர் ரஜினிகாந்த் என தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சூரி

நகைச்சுவை நடிகர் சூரி பதிவிட்டுள்ள டிவிட்டில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நோக்கி ‘ICON OF GOLDEN JUBLIEE' விருது போல் இன்னும் வரவிருக்கும் பல விருதுகளுக்கு வாழ்த்துக்கள்! என தெரிவித்திருக்கிறார்.

ரத்தினமாக ஜொலிக்கும்

நடிகர் விவேக் பதிவிட்டுள்ள டிவிட்டில், ரஜினி சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், அவரது சாதனைகளுக்கும், கவுரவத்திற்கும் விருதுகளுக்குக்கும். இந்திய அரசின் இந்த அங்கீகாரம் அவரது புகழின் கிரீடத்தில் ஒரு ரத்தினமாக ஜொலிக்கும் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X