வாக்குப்பதிவு நாளில் சம்பவம் செய்த சினிமா நட்சத்திரங்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: வாக்குப்பதிவு நாளில் சினிமா நட்சத்திரங்கள் செய்த சுவாரசிய சம்பவங்களை இன்றைய டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.

தமிழ் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை டாப் 5 பீட்ஸ் என வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், நேற்று வாக்குப்பதிவின் போது வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அவர்கள் செய்த சுவாரசியமான சம்பவங்களை வீடியோவாக வழங்கியுள்ளார்.
அதன்படி பெசன்ட் நகர் வாக்குச்சாவடியில் நடந்து வந்து வாக்களித்த நடிகர் விக்ரம் குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே. இதேபோல் வாக்களித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி சாதி மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கூறியதையும் விஜய் சைக்கிளில் வந்தது தொடர்பான கேள்விக்கு அவர் கூறிய பதிலையும் தெரிவித்துள்ளார்.
மேலும் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்களித்த நடிகர் அஜித், ரசிகரிடம் கோபப்பட்டது, மாஸ்க் அணியும்படி அறிவுரை கூறியது உள்ளிட்ட தகவல்களையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாக்களித்தது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.
மேலும் 105 வயது முதியவர் ஓட்டு போட்ட தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











