twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் முதல் மயில்சாமி வரை சினிமாக்காரர்களை ஓரங்கட்டிய மக்கள்.. படுதோல்வி அடைந்த நட்சத்திரங்கள்!

    |

    சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

    கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என சினிமா பிரபலங்கள் ஆண்ட தமிழகத்தில் இம்முறை மொத்தமாய் சினிமாக்காரர்களை மொத்தமாய் ஓரங்கட்டியுள்ளனர் தமிழக மக்கள்.

    அரியணை ஏறும் ஸ்டாலினுக்கு... திரைப்பிரபலங்கள் வாழ்த்து !அரியணை ஏறும் ஸ்டாலினுக்கு... திரைப்பிரபலங்கள் வாழ்த்து !

    தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து இதர கட்சிகள் களம் கண்டன.

    களம்கண்ட கட்சிகள்

    களம்கண்ட கட்சிகள்

    அதேநேரத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சமத்துவ மக்கள் மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சி தனித்து களம் கண்டது. டிடிவி தினகரனின் அமமுக, தேமுதிக மற்றும் ஓவைசி கட்சியுடன் இணைந்து சட்டசபை தேர்தலை சந்தித்தது.

    நட்சத்திரங்கள் படுதோல்வி

    நட்சத்திரங்கள் படுதோல்வி

    இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரியணையில் அமரப் போகிறது. அதேநேரத்தில் இந்த தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

    போராடிய கமல்

    போராடிய கமல்

    கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் காலை முதலே முன்னிலை பின்னடைவு என மாறி மாறி இழுபறியில் இருந்து வந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வானதி சீனிவாசன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் ஆகியோருடன் கடுமையாக போராடினார். ஆனால் கடைசி நேரத்தில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வானதியிடம் தோற்றார் கமல்.

    நடிகை குஷ்பு தோல்வி

    நடிகை குஷ்பு தோல்வி

    இதேபோல் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் நடிகை குஷ்பு. இதில் காலை முதலே பின்னடைவை சந்தித்து வந்த குஷ்பு திமுக வேட்பாளர் முகிலனிடம் படுதோல்வி அடைந்தார்.

    சினேகன் படுதோல்வி

    சினேகன் படுதோல்வி

    இதேபோல் மக்கள் நீதி மய்யம் சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகனும் படுதோல்வியை சந்தித்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவிடம் வீழ்ந்தார் சினேகன்.

    வெறும் 60 வாக்குகள்

    வெறும் 60 வாக்குகள்

    விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மயில்சாமி வெறும் 60 வாக்குகளை மட்டுமே பெற்றார். விருகம்பாக்கம் தொகுதியில் நோட்டாவுக்கு 200க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    286 வாக்குகள் மட்டுமே

    286 வாக்குகள் மட்டுமே

    நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்த நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அவர் வெறும் 286 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

    நல்லவேலை அவர் வரல!

    நல்லவேலை அவர் வரல!

    கடந்த தேர்தல்களில் கருணாஸ், சரத்குமார் உள்ளிட்ட பல சினிமா நடிகர்கள் வெற்றிக்கண்ட நிலையில் இம்முறை சினிமாக்காரர்களை தமிழக மக்கள் ஓரங்கட்டியுள்ளனர். நல்லவேளையாக இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் போட்டியிடவில்லை!

    English summary
    Cinema stars failed in TN assembly election. Kamalhaasan, Khushboo, Snehan, Mayilsamy and Mansoor Alikhan rejected by People.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X