twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தோனி வோர்ல்டு கப் வாங்கனும்னு நினைச்சோம்.. இந்திய அணி தோல்வி குறித்து சினிமா பிரபலங்கள்!

    |

    Recommended Video

    Indian team emotional moment தோல்வியை தொடர்ந்து இந்திய வீரர்கள் கண்ணீருடன் விடைபெற்றனர்

    சென்னை: உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து திரை நட்சத்திரங்கள்
    கருத்து தெரிவித்துள்ளனர்.

    இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடியது. இதனால் புள்ளிப்பட்டியலில் டாப்பில் இருந்தது இந்திய அணி. இந்நிலையில் நேற்று நடைபெற்ற
    அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது.

    இதில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இதனால் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது இந்திய அணி. இந்திய அணியின் தோல்வியை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

    தோனி வோர்ல்டு கப் வாங்கனும்னு நினைச்சோம்.. இந்திய அணி தோல்வி குறித்து சினிமா பிரபலங்கள்! தோனி வோர்ல்டு கப் வாங்கனும்னு நினைச்சோம்.. இந்திய அணி தோல்வி குறித்து சினிமா பிரபலங்கள்!

    கார்த்திக் சுப்புராஜ்

    இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ள டிவிட்டில் மிகவும் வருத்தமளிக்கிறது... பெரிய போராட்டம்.. நாங்கள் அனைவரும் உங்களால் பெருமிதம் கொள்கிறோம். இந்திய அணிக்கு பெரிய சல்யூட்.. ஆனால் தல ரன் அவுட் ஆகி நடந்து செல்வதை பார்க்கும் போது அழுகையாக வருகிறது. எப்போதும் நேசிக்கிறோம் தோனி.. லெஜன்ட் தோனி..என்று தெரிவித்துள்ளார்.

    நடிகை நயன்தாரா

    நடிகை நயன்தாரா பதிவிட்டுள்ள டிவிட்டில் என்ன ஒரு போராட்டமான ஆட்டம் ஜடேஜா மற்றும் தோனி. இந்த மனப்பான்மையை விட்டுவிடாதீர்கள்..மிக நெருக்கம் ஆனாலும் வெகுதொலைவில் உள்ளது. என பதிவிட்டுள்ளார்.

    நடிகை பார்வதி நாயர்

    நடிகை பார்வதி நாயர் பதிவிட்ட டிவிட்டிர் டியர் டீம் இந்தியா.. முழு நாடும் உங்களுக்கு ஆதரவாக உங்களுக்கு பின்னால் உள்ளது. வெற்றியின் போது மட்டும் அல்ல.. நீங்கள் எப்போதுமே சாம்பியன்ஸ்தான்.. என்ன ஒரு இன்னிங்ஸ் கொடுத்தனர் ஜடேஜாவும் தோனியும் எல்லாவற்றிற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

    நடிகர் யோகிபாபு

    நடிகர் யோகி பாபு பதிவிட்டுள்ள டிவிட்டில் நமது தோல்வியை பாகிஸ்தான் மக்கள் கொண்டாடியுள்ளார்கள். முதலில் உங்கள் அணி வீரர்களுக்கு எப்படி அறையிறுதி போட்டிக்குள் செல்ல வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். வெற்றியோ தோல்வியோ நாங்கள் எப்போதும் உங்கள் அணியை விட சிறந்தவர்கள்.

    இயக்குநர் ரத்னகுமார்

    இயக்குநர் ரத்னகுமார் பதிவிட்டுள்ள டிவிட்டில் மீண்டும் ஒரு அரைசதம்.. இந்தியாவின் முதுகெலும்பு முடித்துக்கொள்கிறது. மிஸ் யூ தோனி. என்னுடைய குழந்தை பருவம் நிறைவடைந்துவிட்டது. நன்றி தோனி.. பயிற்சியாளராக விரைவில் வாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

    நடிகர் தனுஷ்

    நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில் நமது வீரர்கள் விளையாடிய விதம் பெருமையடைய செய்கிறது. 5 சதங்கள் அடித்து சாதனையை முறியடித்த ரோகித், தாக்குதலின் தலைவரான பும்ரா, நம்மை இதுவரை வழிநடத்தி கொண்டுவந்த விராத், இளம் வீரர்களான பண்ட், கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோ விளையாடிய விதம் நாங்கள் உங்களால் பெருமை கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

    நடிகர் சித்தார்த்

    நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ள டிவிட்டில் நான் உண்மையாகவே அழுதுவிட்டேன்.. ரன் அவுட்டால் வாழ்க்கையை தொடங்கிய வீரர் இன்று ரன் அவுட்டால் தனது கேரியரை முடித்துக்கொள்கிறார். நாங்கள் எப்போதும் உங்களை நேசிக்கிறோம் தோனி. என தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் வெங்கட் பிரபு

    இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ள டிவிட்டில் தோனியின் உண்மையான ரசிகன் இந்த வலியை உணருவான் என தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் விக்னேஷ் சிவன்

    இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவிட்ட டிவிட்டில் நன்றாக விளையாடினீர்கள் தோழர்களே.. உலகின் சிறந்த அணியை வீழ்த்தியதால் நீங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என நாங்கள் விரும்பினோம்.. அனைத்து என்டர்டெய்ன்மெட்டிற்கும் நன்றி.. இந்திய அணிக்கு பிரிலியன்ட் உலக்கோப்பை தொடர்.. ஒரு நாள் விடுமுறை ஆகிவிட்டது.. பரவாயில்லை தோனி கோப்பையை தூக்க வேண்டும் என்று நினைத்தோம்.. ஆனாலும் பரவாயில்லை என தெரிவித்துள்ளார்.

    Read more about: kollywood
    English summary
    Cinema stars talking about Indian cricket team play in semi final.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X