twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வக்கீல் ரோலில் நடித்து பட்டைய கிளப்பிய சினிமா நட்சத்திரங்கள்.. யார் யாருன்னு பாருங்க மக்களே!

    |

    சென்னை: தமிழ் சினிமாவில் வக்கீலாக நடித்து பட்டைய கிளப்பிய சினிமா நட்சத்திரங்கள் குறித்து ஓர் பார்வை..

    சினிமாவை பொருத்தவரை ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தியே படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக போலீஸ், டாக்டர், வக்கீல், நாட்டாமை, இன்ஜினியர், மாணவர்கள், சினிமாத்துறை சம்பந்தப்பட்டவர்கள், விவசாயி, தொழிலதிபர்கள் என இருப்பது வழக்கம்.

    இதே கதாப்பாத்திரங்கள் நெகட்டிவ் ரோல்களுக்கும் பொருந்தும். இப்படி பல விதமான கதாப்பாத்திரங்கள் கறுப்பு வெள்ளை சினிமா முதலே தமிழ் சினிமாவில் கோலொச்சி வருகிறது.

    அட்டகாசம் தாங்கலயே.. மூஞ்சில நிலா, நட்சத்திரம்லாம் மின்னுது.. ஏலியனாவே மாறிட்டாங்களோ அமலா பால்?அட்டகாசம் தாங்கலயே.. மூஞ்சில நிலா, நட்சத்திரம்லாம் மின்னுது.. ஏலியனாவே மாறிட்டாங்களோ அமலா பால்?

    சிவாஜி கணேசன்

    சிவாஜி கணேசன்

    அந்த வகையில் வக்கீல் கதாப்பாத்தில் பிச்சு உதறிய நடிகர் நடிகைகள் குறித்து காணலாம். நடிகர் சிவாஜி கணேசன் கப்பலோட்டிய தமிழன், கவுரவம் உள்ளிட்ட படங்களில் வக்கீலாக நடித்திருப்பார். அதனை தொடர்ந்து படிக்காதவன் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு அண்ணனாக வக்கீலாக நடித்திருந்தார் சிவாஜி கணேசன். நீதிபதியாக பதவி உயர்வு பெற்றபோதும் கொலை வழக்கில் சிக்கிய தனது தம்பியை காக்க வக்கீலாக ஆஜராகி பிச்சு உதறியிருப்பார் சிவாஜி. இன்று வரையும் அந்தக் காட்சியை ரசிக்காதவர்கள் இல்லை.

    சுஜாதா

    சுஜாதா

    இதேபோல் விதி படத்தில் சகுந்தலா தேவி கதாப்பாத்திரத்தில் வக்கீலாக நடித்திருப்பார் நடிகை சுஜாதா. காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக வாதாடும் சுஜாதா, நீதிமன்றத்தில் தனது கிடுக்கிப்பிடி கேள்விகளாலும், அடுக்கி வைக்கும் ஆதாரங்களாலும் அந்தக் காட்சியில் அத்தனை சுவாரசியங்களை சேர்த்திருப்பார். அவருக்கு எதிராக நடிகர் ஜெய்சங்கரும் லாயராக நடித்திருப்பார். விறுவிறுப்பான நீதிமன்ற காட்சிகளை கொண்ட அந்த படம் பெரும் வெற்றி பெற்றது.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    அடுத்து நடிகர் ரஜினிகாந்த் வக்கீலாக வெளுத்து வாங்கிய நான் மகான் அல்ல படம். 1984ஆம் ஆண்டு வெளியான இப்படம் இந்தியில் வெளியான விஸ்வநாத் என்ற படத்தின் ரீமேக் ஆகும். நடிகர் ரஜினிகாந்த் விஸ்வநாத் என்ற கதாப்பாத்திரத்தில் பிரபலமான வக்கீலாக நடித்திருப்பார். தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் ஹிட்டனது நான் மகான் அல்ல திரைப்படம்.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    அடுத்து கமல்ஹாசன் வழக்கறிஞராக நடித்து அசத்திய படம் அந்த ஒரு நிமிடம். 1985 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் குமார் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் கமல். த்ரில்லர் படமான இப்படத்தில் ஊர்வசி மற்றும் மேஜர் சுந்தர் ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் கமலும் ஊர்வசியும் உண்மைக் குற்றவாளியை சிறைக்கு அனுப்ப தங்களின் உயிரை பணயம் வைப்பதாக நடித்திருப்பார்கள். இந்தப் படம் மட்டுமின்றி தில்லுமுல்லு படத்திலும் நடிகர் கமல்ஹாசன் க்ளைமேக்ஸில் லாயராக கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்திருப்பார்.

    சத்யராஜ்

    சத்யராஜ்

    நடிகர் சத்யராஜும் வக்கீலாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சத்யராஜ் ட்ரிப்பிள் ஆக்ஷனில் நடித்த வில்லாதி வில்லன் படத்தில் வயதான வழக்கறிஞராக நடித்திருப்பார். நம்பர் ஒன் லாயராக பிச்சு உதறும் சத்யராஜ், கொலை வழக்கில் சிக்கும் சத்தியராஜுக்கு ஆதரவாக வாதாடி காப்பாற்றுவதாகவும் பின்னர் தனது மகளை காதலிப்பதை அறிந்து எதிராக மாறுவதுமாக இருக்கும். இந்தப் படத்தை நடிகர் சத்யராஜே இயக்கியிருந்தார்.

    நடிகர் விஜய்

    நடிகர் விஜய்

    அடுத்து நடிகர் விஜய் வக்கீலாக நடித்தப் படம் தமிழன். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருப்பார். 2002 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஒரு நேர்மையான வழக்கறிஞராக நடித்திருப்பார் விஜய். சமானிய மக்களும் சட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படம் காட்சியாக்கப்பட்டிருக்கும். சூரியா என்ற கதாப்பாத்திரத்தில் கிரிமினல் முதலாளிக்கு எதிராக போராடி, இந்திய சட்டம் குறித்த புத்தகத்தை சாமனிய மக்களுக்கு கிடைக்க செய்பவராக நடித்திருப்பார் விஜய்.

    நடிகர் அஜித்

    நடிகர் அஜித்

    அடுத்து அஜித் வக்கீலாக நடித்த படம் நேர் கொண்ட பார்வை. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். அஜித் பரத் சுப்பிரமணியம் என்ற கதாப்பாரத்தில் நடித்திருப்பார். நோ மீன்ஸ் நோ என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் மனைவி இழந்து மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் அஜித், அதில் இருந்து மீண்டு சில இளைஞர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக வாதாடுவதாக நடித்திருப்பார்.

    நடிகர் விக்ரம்

    நடிகர் விக்ரம்

    இதேபோல் நடிகர் விக்ரம் வக்கீலாக நடித்தப் படம் அந்நியன். பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அம்பி கதாப்பாத்திரல் நேர்மையான வக்கீலாக நடித்திருப்பார் விக்ரம். மல்டிப்பில் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டரால் பாதிக்கப்படுவதை மையப்படுத்தி இப்படம் உருக்கப்பட்டிருக்கும். பெரும் வெற்றிப்பெற்ற இப்படத் வசூலையும் குவித்தது.

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    அடுத்து உதநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம். இந்தப் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஜூனியர் வக்கிலாக சக்திவேல் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் உச்சநீதிமன்ற நீதிபதியாக நடித்திருப்பார். அவரை எதிர்த்து வாதாடும் ஒரு ஜூனியர் வக்கீலாக நடித்திருப்பார்.

    அனுஷ்கா

    அனுஷ்கா

    இதோபோல் தெய்வத்திருமகள் படத்தில் நடிகை அனுஷ்கா வக்கீலாக நடித்திருப்பார். 2011ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் விக்ரமின் குழந்தையை அவரிடம் சேர்க்க போராடும் ஒரு வழக்கழறிஞராக நடித்திருப்பார் அனுஷ்கா. இதில் மூத்த வழக்கறிஞரான நாசரை எதிர்த்து வாதாடுவார் அனுஷ்கா. கடையில் நாசரே விக்ரமுக்கு ஆதரவாக மாறி வழக்கில் இருந்து பின்வாங்கி அனுஷ்கா வெற்றி பெருவதாக இருக்கும் இப்படம்.

    நடிகர் ஆர் கே

    நடிகர் ஆர் கே

    அடுத்து எல்லாம் அவன் செயல். நடிகர் ஆர்கே, எல்கே என்ற கதாப்பாத்திரத்தில் வக்கீலாக நடித்திருப்பார். சிந்தாமணி கொலை கேஸ் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். அப்பாவி பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி பெறும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும். கோர்ட்டில் குற்றவாளிகளை தப்பவிடும் ஆர்கே, வெளியே அவர்களை கொல்வதே படத்தின் கதை. இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு வண்டுமுருகன் என்ற கதாப்பாத்திரத்தில் வாதாட தெரியாத வக்கீலாக நடித்திருப்பார்.

    நடிகை ஜோதிகா

    நடிகை ஜோதிகா

    இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா வக்கீலாக நடித்துள்ளார். தவறாக தண்டனை அளிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதியை வழங்கிடப் போராடும் ஒரு நேர்மையான பெண் வழக்கறிஞராக வெண்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்தப் படம் அமேஸான் பிரைமில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    Recommended Video

    Pon Magal Vandhal Jothika as Lady Ajith | Kaa Andrea Jeremiah • Aiswarya Dutta, Myna Nandhini
    கமெண்ட் பண்ணுங்க..

    கமெண்ட் பண்ணுங்க..

    இவர்கள் மட்டுமின்றி இன்னும் பல நடிகர் நடிகைகள் பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ரோல்களில் வக்கீலாக நடித்துள்ளனர். அவர்களில் உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்களின் பெயர்களை கமெண்டுக்களாக எங்களுக்கு தெரிவிக்கலாம்..

    English summary
    Cinema stars who are all acted as Lawyer in Tamil cineam. Sivaji Ganesan to Jyothika acted as lawyer and proved themselves.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X