இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடும் திரை நட்சத்திரங்கள்.. யாருன்னு பட்டியல பாருங்க!
சென்னை: ராணா டகுபதி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடுகின்றனர்.
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு திருமணம் முடித்து தல தீபாவளி கொண்டாடவுள்ள திரை பிரபலங்கள் யார் என்பதை பார்க்கலாம்.

சதீஷ் - சிந்து
அதன்படி அந்தப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஜோடி, நடிகர் சதீஷ் மற்றும் சிந்து. நகைச்சுவை நடிகரான சதீஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிந்துவை திருமணம் செய்தார். அண்மையில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இந்த ஜோடி தற்போது குழந்தையுடன் சேர்ந்து நாளை தல தீபாவளி கொண்டாடவுள்ளது.

மகத் - பிராச்சி
அவர்களை தொடர்ந்து மகத் - பிராச்சி ஜோடி. நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான மகத், கடந்த பிப்ரவரி மாதம் தனது காதலியான பிராச்சியை திருமணம் செய்து கொண்டார். பிராச்சி முன்னாள் மிஸ் இந்தியா ஆவார். அவர்களின் திருமணத்தில் நடிகர் சிம்பு உட்பட திரைத்துறை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகிபாபு - பார்கவி
நடிகர் யோகி பாபுவும் இந்த ஆண்டு திருமணம் செய்த பிரபலங்களின் பட்டியலில் இணைந்தார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தனது, ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். யோகி பாபுவுக்கும் இந்த தீபாவளி தல தீபாவளிதான்.

ஆர்கே சுரேஷ் - மது
நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும் கடந்த மாதம் ரகசியமாக திருமணம் நடைபெற்றது. தங்களின் திருமணத்தை சில நாட்களுக்கு பிறகு நடிகர் ஆர் கே சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். அவர்களுக்கும் இந்த தீபாவளி தல தீபாவளிதான்.

ராணா - மிஹீகா
பிரபல நடிகரான ராணா டகுபதி, தனது காதலியான மிஹீகாவை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டிடுயோவில் கொரோனா காரணமாக எளிமையாக நடந்தது. இதில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், நாகசைதன்யா, வெங்கடேஷ், அல்லு அர்ஜுன், நடிகை சமந்தா உள்பட 30 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் ராணாவுக்கும் இந்த தீபாவளி தல தீபாவளிதான்.

காஜல் அகர்வால் - கவுதம் கிட்சுலு
அடுத்து நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கடந்த 30ஆம் தேதி தொழிலதிபரான கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்தார். தற்போது மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள காஜல் அகர்வாலும் இந்த ஆண்டு தல தீபாவளியை கொண்டாடுகிறார்.


Click it and Unblock the Notifications











