twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழக தேர்தல்...எந்த கட்சியில் எந்த நட்சத்திரத்திற்கு காத்திருக்கிறது வாய்ப்பு

    |

    சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. பிரசாரம் செய்வதற்காக அனைத்து கட்சிகளும் பிரபல சினிமா நடிகர், நடிகைகளை புக் செய்ய போட்டி போட்டு வருகின்றனர்.

    குட்டி தல ஆத்விக்குக்கு 6 வயசாகிடுச்சு.. போஸ்டர், டிரெண்டிங் என தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!குட்டி தல ஆத்விக்குக்கு 6 வயசாகிடுச்சு.. போஸ்டர், டிரெண்டிங் என தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!

    பிரச்சாரம் தவிர்த்து அனைத்து முக்கிய கட்சிகள் சார்பில் போட்டியிட, திரையுலகை சேர்ந்த பலரும் விருப்ப மனு அளித்துள்ளனர். எந்த பிரபலம் எந்த கட்சி சார்பில் போட்டியிட உள்ளார் என்ற விபத்தை இங்கே பார்க்கலாம்.

    போஸ் வெங்கட்

    போஸ் வெங்கட்

    மெட்டிஒலி சீரியல் மூலம் நடிக்க வந்தவர் போஸ் வெங்கட். இவர் சிவாஜி, கவண் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். திமுக சார்பில் அரந்தாங்கி தொகுதியில் போட்டியிட சமீபத்தில் இவர் விருப்ப மனு அளித்திருந்தார்.

    ரவி மரியா

    ரவி மரியா

    பிரபல காமெடி நடிகரும், டைரக்டருமான ரவி மரியா ஆசை ஆசையாய், மிளகாய் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். மாயாண்டி குடும்பத்தார், தேசிங்கு ராஜா, வேலைனு வந்தா வெள்ளைக்காரன், மனம் கொத்தி பறவை, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் அதிமுக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

     விமலின் மனைவி

    விமலின் மனைவி

    களவாணி, வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விமல். இவரின் மனைவி பிரியதர்ஷினி, திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். தனது மனைவி பிரியதர்ஷினியுடன் சென்று திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த விமல், விருப்ப மனுவை அளித்துள்ளார்.

    வேறு யாருக்கு வாய்ப்பு

    வேறு யாருக்கு வாய்ப்பு

    பாஜக.,வில் இணைந்துள்ள குஷ்பு, காயத்ரி ரகுராம் ஆகியோருக்கு சீட் வழங்கப்படவும் வாய்ப்புள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான் தனிக்கட்சி துவங்கி இருப்பதால், அவரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. திமுக.,வில் உதயநிதி ஸ்டாலினுக்காக பலர் விருப்பமனு அளித்துள்ளதால் அவரும் போட்டியிட வாய்ப்புள்ளது.

    விஐபி போட்டியாளர்கள்

    விஐபி போட்டியாளர்கள்

    கமல், விஜயகாந்த், சரத்குமார் போன்றோர் ஏற்கனவே தனிக்கட்சி நடத்துவதால் அவர்களும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. அதிலும் கமல் 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    cinema stars who will get chance to contest in tamilnadu assembly elections
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X